லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் உடனான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ரன்களில் வெற்றி பெற்றது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் போரல், 58 ரன்களைக் குவித்தார். மேலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களையும், ஷாய் ஹோப் 38 ரன்களையும், கேப்டன் ரிஷப் பந்த் 33 ரன்களையும் எடுத்தனர். இதன்மூலம், 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை சேர்த்தது.
இதனைத் தொடர்ந்து, 209 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டி காக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கேல்.எல் ராகுல் 5 ரன்களிலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக ஆடிய நிக்கோலன் பூரண் 27 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார். கடைசிவரை ஆட்டமிழக்காத அர்ஷாத் கான் 58 ரன்களை சேர்த்தார். ஆனால், மற்ற வீரர்கள் சோபிக்காததால், அந்த அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களையே சேர்க்க முடிந்தது.
இதையும் படிக்க:
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறும் டிராவிட்
19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியது. அதேநேரம், 6 வெற்றிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ள லக்னோவுக்கு பிளேஆஃப் வாய்ப்பு மங்கியுள்ளது.
நேற்றைய போட்டியைத் தொடர்ந்து, ஏற்கனவே 8 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பிளேஆஃப் சுற்றுக்கு கொல்கத்தாவைத் தொடர்ந்து 2-ஆவது அணியாக முன்னேறியிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
