• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

லக்னோ அணியின் உரிமையாளரை தவிர்த்த கே.எல்.ராகுல் – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

GenevaTimes by GenevaTimes
April 23, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
லக்னோ அணியின் உரிமையாளரை தவிர்த்த கே.எல்.ராகுல் – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 23, 2025 11:49 AM IST

அடுத்து விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில், அபிஷேக் பூரல் – கே.எல்.ராகுல் ஆகியோரின் அபார ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது.

கே.எல்.ராகுல் - சஞ்சீவ் கோயங்காகே.எல்.ராகுல் - சஞ்சீவ் கோயங்கா
கே.எல்.ராகுல் – சஞ்சீவ் கோயங்கா

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கே.எல்.ராகுல், லக்னோ அணியின் உரிமையாளரிடம் பேசாமல் சென்றது கவனத்தை ஈர்த்துள்ளது.

நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 பந்துகளை மிச்சம் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் லக்னோ அணி பேட்டிங் செய்தது. முகேஷ் குமாரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் லக்னோ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில், அபிஷேக் பூரல் – கே.எல்.ராகுல் ஆகியோரின் அபார ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என விளாசி 57 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

போட்டி முடிந்த பிறகு, வீரர்கள் அனைவரும் கைகுலுக்கிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது, கே.எல்.ராகுல் தனது முன்னாள் அணியின் உரிமையாளர் (இதற்கு முன் கே.எல்.ராகுல் லக்னோ அணியில் விளையாடிக்கொண்டிருந்தார்) கை கொடுக்க வரும்போது, கே.எல்.ராகுலும் கை மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றார். மேலும் லக்னோ அணியின் உரிமையாளர் கே.எல்.ராகுலிடம் எதோ பேச வருவது போல உள்ளது. ஆனால் கே.எல்.ராகுல் அதைத் தவிர்த்துவிட்டு அந்த இடத்தை விட்டுச் சென்றார்.

கே.எல்.ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக இருந்தபோது, சஞ்சீவ் ​​கோயங்கா கே.எல்.ராகுலைப் பொதுவெளியில் திட்டியது அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து கே.எல்.ராகுல் லக்னோ அணியை விட்டு வெளியேறினார். இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சேர்ந்த அவர், லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.

இந்த நிலையில் தான் நேற்று அரைசதம் அடித்த அவர், ஐபிஎல் தொடரில் வேகமாக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி வரும் 27ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

First Published :

April 23, 2025 11:49 AM IST

Read More

Previous Post

‘பிஸ்மில்லாஹ் பிஸ்மில்லாஹ்’ கோஷமிட்ட இளைஞர்கள்.. காஷ்மீர் தாக்குதல் துயரத்திலும் நடந்த சம்பவம்.. பெண் உருக்கம்!

Next Post

பினாங்கு மின் தடையால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் போதுமான தண்ணீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் – Malaysiakini

Next Post
பினாங்கு மின் தடையால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் போதுமான தண்ணீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் – Malaysiakini

பினாங்கு மின் தடையால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் போதுமான தண்ணீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin