Last Updated:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்தது
லக்னோவில் பனி மூட்டம் நீடித்து வரும் நிலையில் இன்று நடைபெறவிருந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சண்டிகரில் நடந்த 2 ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்ட நிலையில், தர்மசாலாவில் நடந்த 3ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்தது. ஆனால் பனி காரணமாக போட்டி தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை போட்டி தொடங்குவதை தள்ளி வைத்துக் கொண்டே இருந்தனர். இரவு 9 மணிக்கு மேலும் பனி நீடித்ததால் அதற்கு மேல் ஆட்டத்தை தொடங்க முடியாத காரணத்தால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
December 17, 2025 9:57 PM IST


