
அண்மையில் முடிவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் றொமேஷ் தரங்க, ஈட்டி எறிதலில் உலக சம்பியன்களைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். தாய்நாட்டிற்குப் பெருமையைக் கொண்டுவந்த அவரது இணையற்ற திறமையையும் அவரது முந்தைய சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவால் கோப்ரல் பதவி நிலையில் இருந்து சார்ஜன்ட் பதவி நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
மேலும் பந்து எதிரிசிங்கவால் றொமேஷ் தரங்கவிற்கு ஒரு சிறப்பு நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்குப் பின்னால் இருந்த அவரது பயிற்சியாளர் டோனி பிரசன்னா மற்றும் உடற்பயிற்சி உதவியாளர் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோரின் சேவைகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு மரியாதை மற்றும் பாராட்டு நிகழ்வானது விமானப்படைத் தலைமையகத்தில் புதன்கிழமை (05) நடைபெற்றது.

