• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை நிரப்புவது கடினம்: சொல்கிறார் புதிய கேப்டன் ஷுப்மன் கில் | difficult to fill Rohit Virat places team india New captain Shubman Gill told

GenevaTimes by GenevaTimes
June 6, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை நிரப்புவது கடினம்: சொல்கிறார் புதிய கேப்டன் ஷுப்மன் கில் | difficult to fill Rohit Virat places team india New captain Shubman Gill told
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இதற்​காக இந்​திய அணி இன்று இங்​கிலாந்து புறப்​பட்​டுச் செல்​கிறது. இதையொட்டி மும்​பை​யில் நேற்று கேப்​டன் ஷுப்​மன் கில்​லும், பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீரும் பத்​திரி​கை​யாளர்​களை சந்​தித்​தனர். அப்​போது ஷுப்​மன் கில் கூறிய​தாவது:

நான் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​ட​போது மிக​வும் மகிழ்ச்​சி​யடைந்​தேன். பேட்​டிங் வரிசையை நாங்​கள் இன்​னும் முடிவு செய்​ய​வில்​லை. எங்​கள் திட்​டங்​களை வகுக்க 10 நாட்​கள் உள்​ளன. இங்​கிலாந்​தில் 10 நாட்​கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்​கிறோம். இதனுடன் நடை​பெறும் பயிற்சி ஆட்​டத்​துக்கு பின்​னரே டெஸ்ட் போட்​டிக்​கான பேட்​டிங் வரிசையை முடிவு செய்​வோம்.

ஒரு தலை​வ​ராக நான், முன்​மா​திரி​யாக செயல்​பட்டு அணியை வழிநடத்த விரும்​பு​கிறேன், நான் விளை​யாடும் எந்​த போட்​டி​யிலும் ஒரு பேட்​ஸ்​மே​னாகவே விளை​யாட விரும்​பு​கிறேன். சராசரி மற்​றும் ரன்​கள் எண்ணிக்​கையை நான் பார்ப்​பது கிடை​யாது. ஆனால் எனது செயல்​திற​னால் அணியை வழிநடத்த விரும்​பு​கிறேன்.

கேப்​டன்​ஷிப்​பில் எனக்​கென குறிப்​பிட்ட பாணி எது​வும் இல்​லை. நேரம் மற்​றும் அனுபவத்​துடன், எனது தனிப்​பட்ட பாணி வெளிப்படும். வீரர்​களின் பலம் மற்​றும் பலவீனங்​களை அறிந்து அவர்​களுக்கு உதவி செய்ய விரும்​பு​கிறேன். வீரர்​கள் அணி​யில் தங்​கள் இடம் குறித்து பாது​காப்​பாக உணரு​வதை உறுதி செய்​வது கேப்​டன் பணி​களில் முக்​கிய​மான ஒன்​று.

ஒவ்​வொரு சுற்​றுப்​பயணத்​தி​லும் தொடரை வெல்ல அழுத்​தம் இருக்​கும். இந்​தி​யா​வுக்​காக பல போட்​டிகளில் வெற்றி பெற்ற இரண்டு வீரர்​களின் (ரோஹித் சர்​மா, விராட் கோலி) இடத்தை நிரப்​புவது நிச்​சய​மாக கடின​மாக இருக்​கும். இது வேறு​பட்​ட​தாக இருக்​கும் என்று நான் நினைக்​க​வில்​லை. எங்​களிடம் அனுபவ​மும் திறமை​யும் சிறந்த கலவை​யில் உள்​ளது.

இங்​கிலாந்து அணி ஒரு குறிப்​பிட்ட வழி​யில் (பாஸ்​பால்) விளை​யாடு​கிறார்​கள். இந்​தி​யா​வில் நாங்​கள் அதை கண்​டோம். நாங்​கள் எங்​கள் செயல்​திறனில் முன்​முயற்​சி​யுடன் இருந்​தால் அது எங்​களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்​கும். இவ்​வாறு ஷுப்​மன் கில் கூறி​னார்.

‘பும்ரா விஷ​யத்​தில் முடிவு எடுக்​க​வில்​லை’: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் கூறும்​போது, “ஆட்​டத்​தின் முடிவு எது​வாக இருந்​தா​லும் நான் எப்​போதும் அழுத்​தத்​திலேயே இருக்​கிறேன். நியூஸிலாந்து மற்​றும் ஆஸ்​திரேலியா தொடர்​களுக்​கு பிறகு நான் அழுத்​தத்​தில் இருந்​தேன், சாம்​பியன்ஸ் டிராபியை வென்ற பிறகும் அதே அழுத்​தத்தை உணர்ந்​தேன். கவுன்டி கிரிக்​கெட்​டில் விளை​யாடிய வீரர்​கள் இருப்​பது எப்​போதும் சிறந்​தது. கருண் நாயர் இந்​தி​யா-ஏ அணிக்​காக இரட்டை சதம் அடித்​துள்​ளார். ஒன்​றிரண்டு போட்​டிகளை வைத்து நாங்​கள் அவரை மதிப்​பிட மாட்​டோம்.

அணிக்கு நல்​லது செய்ய மற்​றொரு வாய்ப்பு வீரர்​களுக்கு கிடைத்​துள்​ளது. நாங்​கள் நல்ல இடத்​தில் இருக்​கிறோம், முக்​கிய​மான சுற்​றுப்​பயணத்துக்கு எங்​களிடம் தரமான வீரர்​கள் உள்​ளனர். இங்​கிலாந்து டெஸ்ட் தொடரில் நிலைமையை கருத்​தில் கொண்டு வெற்​றியை தேடித்தரக்​கூடிய சிறந்த 11 வீரர்​களை தேர்வு செய்​வோம். ஜஸ்​பிரித் பும்ரா எந்த மூன்று டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடு​வார் என்​பது குறித்து நாங்​கள் இன்​னும் முடி​வெடுக்​க​வில்​லை” என்​றார்.

‘ரோடுஷோவை ​விட மக்​கள் உயிர் முக்​கி​யம்’: பெங்​களூரு​வில் ஐபிஎல் வெற்றி கொண்​டாட்​டத்​தின் போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​கள் குறித்து இந்​திய அணி​யின் பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் கூறும்​போது, “ரோடுஷோக்​களை நடத்​து​வ​தில் எனக்கு ஒரு​போதும் ஆர்​வம் இல்​லை. நான் ஒரு வீர​ராக இருந்​த​போதும் அது பிடிக்​க​வில்​லை, இப்​போது ஒரு பயிற்​சி​யாள​ராக​வும் அதை விரும்​ப​வில்​லை. மக்​களின் உயிர்​கள் அதை​விட முக்​கி​யம். பெங்​களூரு​வில் நடந்​தது துயர​மானது, எதிர்​காலத்​தில் இது​போன்று எது​வும் நடக்​காது என்று நம்​பு​கிறேன். நாம் பொறுப்​புள்ள குடிமக்​களாக இருக்க வேண்​டும். நாம் ஒரு ரோடு ஷோவை நடத்​தத்​ தயா​ராக இல்​லை என்​றால்​, அதைச்​ செய்​திருக்​கக்​ கூ​டாது” என்​றார்​.



Read More

Previous Post

நாடு முழுவதும் சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகள் 4,866 ஆக உயர்வு | number of corona patients undergoing treatment across the country has increased to 4866

Next Post

டிவிஎஸ் மோட்டாா் தலைவராகும் சுதா்ஷன் வேணு

Next Post
டிவிஎஸ் மோட்டாா் தலைவராகும் சுதா்ஷன் வேணு

டிவிஎஸ் மோட்டாா் தலைவராகும் சுதா்ஷன் வேணு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin