Last Updated:
Valentine’s Day Rose Sales: காதலர் தின கொண்டாட்டத்தினால் ரோஜா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் ரோஜா விலையும் உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகமெங்கும் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் தங்கள் அன்புக்குரியவருக்கு ரோஜா பூவை கொடுத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். அதனால் இன்று ரோஜா பூ விற்பனையும், விலையும் அதிகரித்துக் காணப்படுகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் காலையில் இருந்தே ரோஜா பூ மற்றும் ரோஜா பூ பொக்கே விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகின்றது. இது குறித்து வியாபாரி கூறுகையில், “காதலர் தினத்தை முன்னிட்டு ஊட்டி ரோஸ், கார்னேஷன், ஜெரிபெரா, கிளிசாந்தம், அயூப் பூக்கள் போன்ற வகையான பூக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஓசூர், பெங்களூர் போன்ற இடங்களிலிருந்து விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொதுவாக 20 ரூபாய்க்கு விற்பனை ஆகும் ரோஜா இன்று 40 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது. பல வண்ணங்களில் ரோஜா விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும் சிவப்பு ரோஜாவே அதிகளவில் விற்பனையாகி வருகிறது. 20 பூக்கள் கொண்ட பஞ்ச் ரோஜா 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் பொக்கே 200 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை விற்பனையாகின்றது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவில் விற்பனை ஆகின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
February 14, 2025 4:34 PM IST
Valentine’s Day Rose Sales: ரோஜா ரோஜா… சிவப்பு ரோஜாவுக்கு மவுசு ஜாஸ்தி… காதலர் தினத்தால் களைகட்டும் விற்பனை…

