Last Updated:
ஒருநாள் போட்டி தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிடி முதலிடத்தில் உள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. மதியம் 1:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும்.
ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டி தொடரில் வென்று கோப்பை கைப்பற்றும் முனைப்புடன் இன்று களம் காண உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் இடம் பெறுவதால், இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைப்பதற்கு அவருக்கு இன்னும் மூன்று சிக்ஸர்கள் தேவைப்படுகின்றன. அதாவது, ஒருநாள் போட்டி தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிடி முதலிடத்தில் உள்ளார்.
அவர் 351 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மா 349 சிக்ஸர்களுடன் உள்ளார்.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கேல், இலங்கையின் சனத் ஜெயசூர்யா, இந்தியாவின் எம்.எஸ். தோனி ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூவரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா மூன்று சிக்ஸர்களை அடித்தால், அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த நம்பர் ஒன் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார்.
November 30, 2025 12:25 PM IST


