Last Updated:
ரோகித் சர்மா தனது சகோதரரை கடிந்துகொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
கார் சேதமடைந்திருந்ததால் ரோகித் சர்மா அவரது சகோதரரை கடிந்துகொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் புதிதாக 4 ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் அஜித் வாடேகர், பிசிசிஐ முன்னாள் தலைவர் சரத் பவார், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் அமோல் காலே ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டது.
புதிய ஸ்டாண்ட் திறப்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார், ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரோகித் சர்மா மற்றும் அவரது குடும்பம் கிளம்பியபோது, அவர் செல்லவிருந்த காரில் சேதம் ஏற்பட்டிருந்ததை ரோகித் சர்மா பார்த்தார்.
அந்த காரில் சென்றபோது ஏதும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஊகித்த ரோகித் சர்மா, தனது சகோதரரான விஷாலை கடிந்துகொண்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவிற்கு பலரும், “அவர்கள் சகோதரர்கள்” என்றும், “இது சாதாரணமான ஒன்றுதான்” என்றும் “ரோகித் சர்மா தனது காரை எவ்வளவு நேசிக்கிறார்” என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று கடைசி இடத்தில் உள்ளது.
Mumbai,Maharashtra
May 17, 2025 10:30 AM IST


