இந்த விதி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொருந்தும். போலி மற்றும் நகல் ரேஷன் கார்டுகளைத் தடுக்கவும், தேவைப்படுபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யவும் e-KYC உதவும் என்று அரசாங்கம் கூறுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்குள் e-KYC முடிக்கப்படாவிட்டால், ரேஷன் சலுகைகள் நிறுத்தப்படலாம் என்று அதிகாரிகள் தெளிவாகக் கூறியுள்ளனர். இந்த செயல்முறையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் செய்து முடிக்கலாம். அதை எப்படி செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி, சில நிமிடங்களில் e-KYC-ஐ முடிக்கலாம். கீழே உள்ள வழிகளைப் பின்பற்றவும்.
1. உங்கள் ஆதார் எண் உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பதையும், உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்யவும்.
2. உங்கள் மாநிலத்தில் ரேஷன் கார்டு e-KYC-க்காகப் பயன்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் ஆப்பை (எ.கா: மேரா KYC, ஆதார் FaceRD அல்லது அதிகாரப்பூர்வ மாநில PDS ஆப்) டவுன்லோடு செய்யவும்.
3. ஆப்பை ஓபன் செய்து, அதில் ரேஷன் கார்டு e-KYC-க்கான ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.
4. உங்கள் ஆதார் எண்ணைப் பதிவிட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP-ஐப் பயன்படுத்தி அதைச் சரிபார்க்கவும்.
5. ஆப் வழிகாட்டுதலின்படி பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் அல்லது பேஸ் ஆதென்டிகேஷனைப் பூர்த்தி செய்யவும்.
6. வெரிஃபிகேஷன் முடிந்ததும், சிஸ்டமில் e-KYC ஸ்டேட்டஸ் ஆட்டோமேட்டிக்காகவே அப்டேட் செய்யப்படும்.
7. ஆப் அல்லது PDS இணையதளத்தில் உங்கள் e-KYC ஸ்டேட்டஸைச் சரிபார்த்து, அது முடிந்தது அல்லது சரிபார்க்கப்பட்டது எனக் காட்டுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
1. உங்களுக்கு அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது பொதுச் சேவை மையத்திற்குச் (CSC) செல்லவும்.
2. உங்கள் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டை உடன் எடுத்துச் செல்லவும்.
3. நீங்கள் ரேஷன் கார்டு e-KYC-ஐ முடிக்க விரும்புவதாக டீலர் அல்லது ஆபரேட்டரிடம் தெரிவிக்கவும்.
4. கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் மூலம் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷனை வழங்கவும்.
5. வெரிஃபிகேஷன் முடிந்ததும், உங்கள் e-KYC விவரங்கள் சிஸ்டமில் அப்டேட் செய்யப்படும்.
6. ரேஷன் கார்டு e-KYC முடிந்துவிட்டதா என்பதை ரேஷன் கடைக்காரரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

