மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பதட்டங்கள் சர்வதேச எரிசக்தி விநியோக முறையை பாதித்துள்ளன. இது நமது நாட்டின் எல்பிஜி இருப்புக்களை பாதிக்க வாய்ப்புள்ளது. அடுத்த 10 முதல் 12 நாட்களில், குறிப்பாக உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில், எரிவாயு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பேரழிவு சூழ்நிலைகள் ஏற்பட்டால், மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க மண்ணெண்ணெய் விநியோகம் ஒரு பேக்அப் ஆப்சனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது நிரந்தர முடிவு அல்ல. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்று தெரிகிறது.

