• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
June 7, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்களுக்கான கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமின்றி தொடர்வதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில், குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலேயே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

தொடர்ந்து 8 வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத சூழலில், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல், பழைய நிலையே நீடிக்கும்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சக்திகாந்ததாஸ், “நிதிக் கொள்கைக் குழுவில் 4:2 என்ற பெரும்பான்மையுடன் ரெப்போ வட்டி விகிதத்தை 6.5%ஆக தொடர முடிவு செய்யப்பட்டதாகவும், இதனால் நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75ஆகவும் உள்ளது.

விளம்பரம்

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகள் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை, அதாவது 2023-24ஆம் ஆண்டிற்கான GDP வளர்ச்சியை 8.2% ஆக வைத்துள்ளது. 2024-25ஆம் ஆண்டில், இதுவரை உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் பின்னடைவைத் தக்க வைத்துள்ளன. உள்நாட்டுத் தேவையை வலுப்படுத்தியதன் பின்னணியில் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன” என்று சக்திகாந்ததாஸ் தெரிவித்தார்.

ஏப்ரல் 2024-ல் 8 முக்கிய தொழில்கள் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கொள்முதல் நிர்வாகக் குறியீடு, அதாவது உற்பத்தித் துறையில் கொள்முதல் நிர்வாகக் குறியீடு மே 2024-ல் தொடர்ந்து வலிமையாக உள்ளது. கிடைக்கக் கூடிய உயர் அதிவெண் குறிக்காட்டில் இருந்து தெளிவாக தெரிந்தபடி, சேவைத்துறை மிதவையான சூழலை தக்க வைத்துள்ளது. மே 2024ல் கொள்முதல் நிர்வாக குறியீடு சேவைகள் 60.2ஆக வலுவாக இருந்தன. இது செயல்பாட்டில் தொடர்ச்சியானமற்றும் வலுவான விரிவாக்கத்தைக் குறிக்கிறது என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க : EPF விதிகளில் புதிய மாற்றம் – இனிமே இதெல்லாம் ரொம்ப ஈஸி!

2024-25 நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி மொத்தமாக 7.2%ஆக இருக்கும் என்றும் ஆர்பிஐ கணித்துள்ளதாக கூறிய அவர், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி முதல் காலாண்டில் 7.3% ஆகவும், இரண்டாவது காலாண்டில் 7.2% ஆகவும், மூன்றாவது காலாண்டில் 7.3% ஆகவும் மற்றும் நான்காவது காலாண்டில் 7.2% ஆகவும் இருக்கும் என்றும் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

.

Read More

Previous Post

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 251 ரன்னில் ஆல் அவுட் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் ஷிப் ராக்கெட்… 4வது சோதனையில் வெற்றி!

Next Post
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் ஷிப் ராக்கெட்… 4வது சோதனையில் வெற்றி!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் ஷிப் ராக்கெட்... 4வது சோதனையில் வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin