• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.9,518 கோடி தரோம் எங்களை அடிக்காதீங்க! ஹவுதிகளிடம் டீல் பேசும் சவுதி அரேபியா? | Saudi Arabia offers Rs.9,518 Cr to Houthis to stop attack via Iran

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரூ.9,518 கோடி தரோம் எங்களை அடிக்காதீங்க! ஹவுதிகளிடம் டீல் பேசும் சவுதி அரேபியா? | Saudi Arabia offers Rs.9,518 Cr to Houthis to stop attack via Iran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Updated: Tuesday, October 27, 2026, 18:17 [IST]

டெஹ்ரான்: சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹவுதிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறும் சவுதி அரேபியா மொத்தமாக சரண்டராகி உள்ளது. ரூ.9,518 கோடி தருகிறோம். எங்களை விட்டுவிடுங்கள் என்று சவுதி அரேபியா, ஈரான் மூலமாக ஹவுதிகளிடம் பேச்சுவார்த்தைக்கு தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

saudi-arabia-offers-rs-9-518-cr-to-houthis-to-stop-attack-via-iran

சவுதி அரேபியா மீது ஏமன் ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலை சவுதி அரேபியாவால் தடுக்க முடியவில்லை. சவுதியின் வான்வெளி தடுப்பு சாதனங்களையும் மீறி ஹவுதிகளின் தாக்குதல் தொடர்கிறது.

ஹவுதிகளின் ஏவுகணைகள், ட்ரோன்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதோடு, 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து ஹவுதிகள் நடத்தும் தாக்குதலால் சவுதி அரேபியா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது சவுதி அரேபியாவிற்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் சவுதி அரேபியா மொத்தமாக, ஹவுதிகளிடம் சரணடைந்துள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் தருகிறோம். எங்கள் மீதான தாக்குதலை ஹவுதிகள் நிறுத்த வேண்டும் என்று சவுதி அரேபியா சார்பில் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. ஹவுதிகள், ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் இதுதொடர்பாக ஈரானிடம், சவுதி அரேபியா வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை இஸ்ரேல் ஊடகமான ‘இஸ்ரேல் ஹயோம்’ செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ”சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தம்பியான பாதுகாப்பு துறை அமைச்சரும், இளவரசருமான காலித் பின் சல்மான் திடீரென்று ஈரானுக்கு சென்றுள்ளார். அப்போது சவுதி அரேபியா மீதான தாக்குதலை ஹவுதிகள் நிறுத்த கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்காக ஹவுதிகளுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கவும் தயார் என கூறியுள்ளார். இதற்காக கையோடு காலித் பின் சல்மான் அந்த பணத்தை தான் பயணித்த ‘ஹெர்குலஸ்’ ராணுவ விமானத்தில் எடுத்து சென்றுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதுபற்றி ஈரான், ஹவுதி மற்றும் சவுதி அரேபியா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

முன்னதாக, ‘மெக்கா’ ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் ஈரான் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி சவுதி அரேபியா சார்பில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தம்பியும், பாதுகாப்பு துறை அமைச்சருமான காலித் பின் சல்மான், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், துருக்கி உளவுத்துறையின் தலைவர் இப்ராஹிம் காலின் ஆகியோர் ஈரானுக்கு சென்றனர். ஹவுதிகள், ஈரான் ஆதரவில் செயல்பட்டு வரும் அமைப்பாகும்.

இதனால் சவுதி அரேபியா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஷின் ரெசாய் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான் சவுதி அரேபியா மீதான தாக்குதலை நிறுத்தினால் உடனடியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.9,518 கோடி) வழங்க முன்வந்துள்ளது.

ஹவுதிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், பதிலடி கொடுக்கவும் ‘மெக்கா’ ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான், துருக்கியிடம் சவுதி அரேபியா உதவி கோரியது. இதில் பாகிஸ்தான் தனது படை வீரர்களை சவுதி அரேபியாவிற்கு அனுப்பிய நிலையில் துருக்கி ராணுவ உதவிகளை அளித்தது. இருப்பினும் இந்த 3 நாடுகள் கைகோர்த்தாலும் ஹவுதிகள் தொடர்ந்து சவுதி அரேபியாவை குறிவைத்து தாக்கி வருகிறது.

இதனால் தான் இனியும் பாகிஸ்தான், துருக்கியை நம்புவதை விட பணம் கொடுத்தாவும் ஹவுதிகளை சமாதானம் செய்து நாட்டை காக்கலாம் என சவுதி அரேபியா ஈரானிடம் டீல் பேசி உள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary

The Houthis have been continuously launching attacks on Saudi Arabia. Struggling to cope with these assaults, Saudi Arabia has effectively surrendered; reports indicate that the kingdom is now prepared to negotiate with the Houthis-facilitated by Iran-offering a payment of 9,518 crore rupees in exchange for being left alone.

Read More

Previous Post

நாளைய பாடசாலை செயற்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Next Post

தீபாவளி கிஃப்டாக வரும் ரூ.2000.. அக்டோபர் 30-ஆம் தேதி விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | PM Kisan 24th Instalment: Rs 2,000 to Be Released on October 30; Are You Eligible?

Next Post
தீபாவளி கிஃப்டாக வரும் ரூ.2000.. அக்டோபர் 30-ஆம் தேதி விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | PM Kisan 24th Instalment: Rs 2,000 to Be Released on October 30; Are You Eligible?

தீபாவளி கிஃப்டாக வரும் ரூ.2000.. அக்டோபர் 30-ஆம் தேதி விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | PM Kisan 24th Instalment: Rs 2,000 to Be Released on October 30; Are You Eligible?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin