ஆன்லைன் பங்கு வர்த்தக தளமான ஜெரோதாவின் (Zerodha) இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நிதின் காமத், கடந்த ஆறு வாரங்களுக்கு முன்பு, தான் லேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கடந்த திங்கள் கிழமையன்று தெரிவித்திருக்கிறார். சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் தனது உடல்நலம் தற்போது தேறி வருவதாகவும், அதற்கு தேவையான பயிற்சிகளை தான் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சோர்வு, நீரிழப்பு, அதிக வேலை, மோசமான தூக்கம் மற்றும் அவரது தந்தையின் சமீபத்திய மரணம் போன்ற காரணிகள் தனது உடல்நிலையில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதனால் கூட, தான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் யூகிப்பதாக நிதின் காமத் தெரிவித்துள்ளார். தனக்கு முகத்தில் ஒரு பெரிய தளர்ச்சி ஏற்பட்டதாகவும், அதனால் தன்னால் எழுதவோ, படிக்கவோ முடியாமல் போனதாகவும் கூறியுள்ள நிதின், தற்போது தான் தளர்வில் இருந்து சிறிது தப்பித்துவிட்டதாகவும், தன்னால் இப்போது அதிகமாக எழுதவும், படிக்கவும் முடிகிறது என்றும் அவர் கூறினார். எதிலும் பெரிதாக நாட்டமில்லாமல் இருந்த தான் தனது போக்கில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், நான் முழுமையாக குணமடைவதற்கு 3 முதல் 6 மாதங்கள் வரையில் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
40 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதை அவரது நிலை வெளிப்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் தீவிரமாக இருப்பதற்காக அறியப்பட்ட நிதின் காமத், தனிப்பட்ட நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த நுண்ணறிவுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நிதின் காமத்?:
44 வயதான நிதின் காமத், 2010 இல் தனது சகோதரர் நிகில் காமத்துடன் இணைந்து ஜெரோதாவை நிறுவினார். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, அவரது நிகர மதிப்பு $3.9 பில்லியனாக உள்ளது. பங்குச்சந்தையில் அவரது பயணம் 17 வயதில் தொடங்கியது. ஆரம்பத்தில் பணத்தை இழந்த நிதின் பிறகு, தனது இழப்புகளை மீட்டெடுக்க நான்கு ஆண்டுகள் கால் சென்டரில் பணியாற்றினார்.
ஜெரோதாவைத் தொடங்குவதற்கு முன், நிதின் காமத் ரிலையன்ஸ் மனியின் உரிமையாளராக இருந்தார். ஜெரோதாவை தவிர்த்து இவர், பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரித்து வரும், ரெயின்மேட்டர் எனப்படும் துணிகர மூலதன நிதியின் மூலம் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறார்.
தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் வசித்து வரும் நிதின் காமத் வேலையை தவிர்த்து, டிரம்ஸ் வாசிக்கும் தனது மகன் கியானுடன் கிட்டார் வாசிப்பதை விரும்பும் நிதின், அதனை வழக்கமாக செய்து வருகிறார். மேலும், அவர் ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், கூடைப்பந்து, போக்கர் போன்ற விளையாட்டுகளையும், இசையை விரும்பி கேட்கவும் விரும்புகிறார்.
April 17, 2025 6:11 PM IST
ரூ.80,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்துக்கு சொந்தக்காரர்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல கோடீஸ்வரரின் பதிவு!

