Last Updated:
Offer Sale: வீட்டு உபயோகப் பொருட்கள் ரூ.69 முதல் ஆஃபரில் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
வீட்டிற்குத் தேவையான பாத்திரங்கள், குடை, டப்பு, ஷோகேஸ் பொருட்கள் மற்றும் ஆடைக்கு ஏற்ப விதவிதமான காலணிகள் ஆகிய பொருட்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்பட்டாலே மக்கள் கூட்டம் குவிந்து விடும். அதிலும் இவையனைத்தும் ஆஃபர் விலையில் விற்பனை செய்தால் சொல்லவா வேண்டும்.
அப்படிச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்களுக்குப் பலவகை காலணி ரகங்களை , வீட்டிற்குத் தேவையான பொருட்கள் விற்பனை எஸ்போ தூத்துக்குடி – பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள ராமையா மஹாலில் நடைபெற்று வருகிறது.
இந்த எக்ஸ்போவில் கத்தி முதல் பெரிய பெரிய டப்பு வரை விலை குறைவாக ஆஃபரில் போடப்பட்டுள்ளது. மேலும் விதவிதமான மாடல்களில் காலணிகள் இருக்கின்றன. சமையலுக்குத் தேவைப்படும் ஈய பாத்திரங்கள் அனைத்தும் ரூபாய் 160 ரூபாய்க்கு விலை குறைவாகக் காணப்படுகிறது, அதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டும் வாங்கியும் செல்கின்றனர்.
இதையும் படிங்க: Petrol To EV Conversion: வெறும் 6 ரூபாயில் 50 கி.மீ பயணம்… எலட்ரிக் வண்டி வாங்குற ஐடியா இருந்தா முதல்ல இத தெரிஞ்சுக்கோங்க…
இந்த எக்ஸ்போவில் வீட்டிற்குத் தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் 69 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது. மேலும் செருப்புகளும், ஷூக்களும் 99 ரூபாயிலிருந்து ஆரம்பமாகின்றது. அனைத்துப் பொருட்களின் விலையும் குறைந்து காணப்படுகிறது என்பதால் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து வாங்கிச் செல்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
February 24, 2025 11:49 AM IST

