• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.61,000 கோடி மதிப்பிலான 5G ஸ்பெக்ட்ரம் பெற்ற BSNL…! டெல்லியில் அறிமுகப்படுத்த திட்டம்…

GenevaTimes by GenevaTimes
April 8, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ரூ.61,000 கோடி மதிப்பிலான 5G ஸ்பெக்ட்ரம் பெற்ற BSNL…! டெல்லியில் அறிமுகப்படுத்த திட்டம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 08, 2025 6:17 PM IST

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொடங்கி, 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 5G சேவைகளை அறிமுகப்படுத்த BSNL தயாராகி வருகிறது. அறிக்கைகளின்படி, BSN-ன் 5G சேவையை பெறப்போகும் முதல் நகரமாக டெல்லி இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

News18News18
News18

சமீபத்திய தலைமுறை தொலைதொடர்பு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்திற்கு ரூ.61,000 கோடி மதிப்புள்ள 5G அலைக்கற்றையை தொலைதொடர்புத் துறை (DoT) சமீபத்தில் ஒதுக்கியுள்ளது.

இந்த நடவடிக்கை அடுத்த தலைமுறை மொபைல் சேவைகளை வழங்கும் BSNL நிறுவனத்தின் திறனை அதிகரிக்கும் மற்றும் அதன் வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BSNL நிறுவனத்திற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு 700 MHz மற்றும் 3300 MHz போன்ற பிரீமியம் அலைவரிசைகளை உள்ளடக்கியது, இவை அதிவேக 5G இணைப்பை வழங்குவதற்கு முக்கியமானவை.

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தொடங்கி, 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 5G சேவைகளை அறிமுகப்படுத்த BSNL தயாராகி வருகிறது. அறிக்கைகளின்படி, BSN-ன் 5G சேவையை பெறப்போகும் முதல் நகரமாக டெல்லி இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேசிய தலைநகரான டெல்லியின் பல பகுதிகளில் டவர்களை நிறுவும் பணியில் BSNL ஈடுபட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் 5G சேவைகளை நிறுவனம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை BSNL நிறுவனத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப மறுமலர்ச்சியில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தான் துவங்க உள்ள 5G சேவையை சப்போர்ட் செய்ய BSNL ஏற்கனவே 83000-க்கும் மேற்பட்ட 4G பிளாட்ஃபார்ம்களை இன்ஸ்டால் செய்துள்ளது. மார்ச் 2025 நிலவரப்படி இவற்றில் 74,000-க்கும் மேற்பட்டவை செயல்பாட்டில் உள்ளன. மேலும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உபகரணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த பிளாட்ஃபார்ம்கள் 5G-ஐ மேம்படுத்தக்கூடியவை. தாமதமின்றி 5G போட்டியில் களமிறங்க BSNL-க்கு இந்த உள்கட்டமைப்பு அடித்தளம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

இதையும் படிக்க: Personal loan | பர்சனல் லோன் பேமென்ட் செலுத்த தவறினால் ஏற்படும் சட்டரீதியான நடவடிக்கைகளும், அபராதங்களும்…!

டாடா குரூப் நிறுவனமான தேஜஸ் நெட்வொர்க்ஸ், BSNL-ன் நெட்வொர்க் மேம்படுத்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. Q3 FY25-ல் மட்டும், இது பிளாட்ஃபார்ம்களுக்கு உபகரணங்களை வழங்கியது. மேலும் இந்த சமீபத்திய 5G அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம், போட்டித்தன்மை வாய்ந்த 5G துறையில் நுழைவதற்கு BSNL எப்போதும் இல்லாத அளவுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நடவடிக்கை திறமையாக செயல்படுத்தப்பட்டால், இந்தியாவின் தொலைதொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பை மறுவடிவமைத்து, வலுவான பொதுத்துறை உள்கட்டமைப்பால் ஆதரிக்கப்படும் மாற்று 5G நிறுவனத்தை மக்கள் காண்பார்கள்.

இதையும் படிக்க: 2025-ம் ஆண்டுக்கான ஃபோர்பஸ் பில்லியனர்கள் பட்டியலில் எந்த நகரம் முதலிடத்தில் உள்ளது தெரியுமா…?

இதனிடையே இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசானது, BSNL நிறுவனத்தின் 4G நெட்வொர்க்கை விரிவுபடுத்த கூடுதலாக ரூ.6,000 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்தது. இது தவிர கூடுதலாக பல அரசு தொகுப்புகள் மூலம் கிட்டத்தட்ட 3.22 லட்சம் கோடி நிதியை BSNL நிறுவனத்திற்கு ஒதுக்கி உள்ளது. இது பொது தொலைதொடர்புத் துறையை மீட்டெடுப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

First Published :

April 08, 2025 6:17 PM IST

Read More

Previous Post

‘தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்’ – சொல்கிறார் அக்சர் படேல் | we wish to make impact says dc captain axar patel ipl 2025

Next Post

உணவு டெலிவரி செய்வது போல்.. வீடு தேடி சென்று போதை பொருள் விற்ற பெண் கைது | Makkal Osai

Next Post
உணவு டெலிவரி செய்வது போல்.. வீடு தேடி சென்று போதை பொருள் விற்ற பெண் கைது | Makkal Osai

உணவு டெலிவரி செய்வது போல்.. வீடு தேடி சென்று போதை பொருள் விற்ற பெண் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin