எம்க்யூர் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைவர் நமிதா தாபர். இவர் ஷார்க் டேங்க் இந்தியா (Shark Tank India) நிகழ்ச்சியின் முதலீட்டாளர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். இவருடைய நிறுவனம் கூடிய விரைவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளதால், பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலமாக மட்டுமே ரூ.127 கோடிக்கு மேல் நமிதா தாபர் சம்பாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 10ம் தேதி அன்று இந்நிறுவனத்தின் ஐபிஓ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதில் நமிதா தாப்பர் ஆஃபர் ஃபார் சேல் (OFS) என்பதன் வழியாக தன்னிடம் உள்ள 2.68 லட்சம் பங்குகளை விற்பனை செய்கிறார்.
இந்த ஐபிஓ மூலமாக தனது ஆரம்ப காலத்தில் முதலீடு செய்த தொகையை விட 293 மடங்கு வருவாயைப் பெற உள்ளார் நமிதா தாபர். ஒரு பங்கு சராசரியாக ரூ.3.44 என்ற விலையில் இவருடைய பங்குகள் அனைத்தையும் எம்க்யூர் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பெற்றுக்கொண்டார். இந்த ஐபிஓ-வில் ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக ரூ.1008 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்குகளின் விற்பனை மூலமாக மட்டுமே இவருக்கு ரூ.127 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு சில விஷயங்களை சொல்லிக் கொள்கிறோம்; நமிதா தாபரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.600 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும் பங்கு எம்க்யூர் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதன் மூலமாக இவருக்கு கிடைக்கிறது.
எம்பிஏ பட்டம் பெற்றுள்ள நமிதா தாபர், ஜூலை 28, 2024 முதல் கூடுதலாக ஐந்து ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் இயக்குநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அமெரிக்காவுக்குச் சென்று, அங்குள்ள கைடன்ட் கார்ப்பரேஷன் என்ற மருத்துவ சாதன நிறுவனத்தில் பிசினஸ் ஃபைனான்ஸ் தலைவராகப் பணியாற்றினார்.
இதையும் படிக்க:
செல்வமகள் சேமிப்பு திட்டம் : லாபமா..? நட்டமா..?
அதன் பின்னர் எம்க்யூர் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக (CFO) பணியில் சேர்ந்தார் நமிதா தாபர். விரைவிலேயே அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். எம்க்யூர் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனமானது நமிதா தாபரின் தந்தை சதீஷ் மேத்தாவால் தொடங்கப்பட்டது. அவர் தற்போது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
எம்க்யூர் நிறுவனத்தில் பணிபுரியும் விகாஸ் தாபரை திருமணம் செய்துள்ளார் நமிதா. எம்க்யூர் நிறுவனம் தவிர, இன்க்ரெடிபிள் வென்ச்சர்ஸ் லிமிடெட் என்ற கல்வி நிறுவனத்திற்கும் தலைமை தாங்கி வருகிறார் நமிதா தாப்பர். இதற்கிடையில் பிரபல பிசினஸ் ரியாலிட்டி ஷோவான ஷார்க் டேங்க் இந்தியாவுக்காக, ஒரு எபிசோடுக்கு மட்டும் ரூ.8 லட்சம் சம்பளமாக பெறுகிறார் நமிதா தாபர்.
இதையும் படிக்க:
PM Kisan : விவசாயிகள் காட்டில் பணமழை – பட்ஜெட்டில் ஹேப்பி நியூஸ்
நமிதா தாபருக்கு சொந்தமாக புனேவில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஆடம்பர சொகுசு வீடு உள்ளது. நமிதா தாப்பருக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள BMW X7, மெர்சிடஸ் பென்ஸ் GLE மற்றும் ஆடி Q7 போன்ற ஆடம்பர கார்கள் சொந்தமாக உள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)