சொந்தமாக ஒரு ஸ்டார்ட்அப் அல்லது தொழில் தொடங்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்குத் தேவையானதெல்லாம் சரியான தொலைநோக்குப் பார்வையும், பக்காவான திட்டமிடலும் மட்டும்தான். ஃபோர்ப்ஸ் (Forbes) மற்றும் ஸ்டார்ட்அப் இந்தியா அமைப்புகளின் வளர்ச்சித் தரவுகளின்படி, மிகக் குறைந்த முதலீட்டில் தொடங்கி பெரிய அளவில் லாபம் ஈட்டக்கூடிய 7 தொழில்களைப் பற்றி பார்ப்போம். 1. கிளவுட் கிச்சன் (Cloud Kitchen) – இன்றைய ஸ்விக்கி, ஜொமாட்டோ யுகத்தில் பெரிய உணவகம் வைக்கத் தேவையில்லை. உங்கள் வீட்டு சமையலறையிலிருந்தே உணவுகளைத் தயாரித்து ஆன்லைனில் விற்கலாம். ரூ. 50,000 பட்ஜெட்டில் நல்ல பாத்திரங்கள், பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் ஆரம்ப மளிகைப் பொருட்களை வாங்கிவிடலாம். உணவின் தரம் நன்றாக இருந்தால், ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் சில வருடங்களில் கோடிகளில் டர்ன்ஓவர் செய்ய முடியும்.


