Last Updated:
உங்களுடைய எமர்ஜென்சி ஃபண்ட் என்பது உங்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டுமே தவிர உங்களை எப்பொழுதும் ஒரு பதட்டமான மனநிலையில் வைக்கக்கூடாது.
அவசரகால நிதி அல்லது எமர்ஜென்சி ஃபண்ட் என்பது வேலை இழப்பு, மருத்துவ செலவுகள் அல்லது அவசரமாக வீட்டை மராமத்து பார்க்க வேண்டிய தேவை போன்ற சூழ்நிலைகளின் போது உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் உதவக்கூடிய ஒரு பாதுகாப்பு வலையாக அமைகிறது.
ஒரு பொதுவான விதியாக 3 முதல் 6 மாதங்களுக்கான செலவுத் தொகையை எமர்ஜென்சி ஃபண்டாக வைத்திருப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது. பெரும்பாலான நபர்களுக்கு 5 லட்சம் ரூபாய் என்ற இலக்கு சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் இந்தத் தொகையை எவ்வாறு அமைப்பது? என்ற கேள்வி உங்களுடைய மனதில் இருந்தால், எமர்ஜென்சி ஃபண்டை அமைப்பதற்கான சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
அவசரகால சூழ்நிலைகளுக்காகவே ஒரு சேமிப்பு கணக்கை திறப்பது என்பது எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்குவதற்கான மிகவும் எளிமையான ஒரு வழி. மேலும் வழக்கமான செலவுகளுக்கு இந்த பணத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்கும் இது உதவுகிறது. எனவே அதிக வட்டி கிடைக்கக்கூடிய, அதே சமயத்தில் உங்களுடைய பணத்தை உடனடியாக அணுகும் வகையிலான ஒரு சேமிப்பு கணக்கை கண்டுபிடிக்கவும். 5 லட்சம் ரூபாயை அடையும் வரை ஒவ்வொரு மாதமும் உங்களால் முடிந்த ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்து வாருங்கள். உங்களுடைய சம்பள கணக்கில் இருந்து நேரடியாக இந்த சேமிப்பு கணக்கிற்கு பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான ஆட்டோமேட் ஆப்ஷனை எனேபிள் செய்து கொள்ளுங்கள்.
ஃபிக்சட் டெபாசிட்கள் என்பது உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களோடு உங்களுடைய பணத்தை பத்திரமாக திரும்ப பெறக்கூடிய ஒரு பாதுகாப்பான வழியாகும். பல வங்கிகள் 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான கால அளவுகள் கொண்ட ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளை வழங்குகின்றன. இவை சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்கக்கூடியவை. சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தோடு ஒப்பிடும்போது ஃபிக்சட் டெபாசிட்டில் இருக்கும் பணத்தை உடனடியாக உங்களால் பயன்படுத்த முடியாது என்றாலும் கூட, வெவ்வேறு மெச்சூரிட்டி கால அளவு கொண்ட பல்வேறு ஃபிக்சட் டெபாசிட்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகள் குறுகிய கால கடன் பத்திரங்களில் முதலீடு செய்து சேமிப்பு கணக்குகளை விட சிறந்த ரிட்டன்களை கொடுக்கக் கூடியது. இவை வழக்கமாக 24 மணி நேரம் என்ற உடனடி வித்டிராயல் வசதியை கொண்டுள்ளன. மேலும் இது எமர்ஜென்சி ஃபண்டுகளுக்கு ஏற்ற ஒரு ஆப்ஷனாகவும் அமைகிறது. எனினும் இதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கும் ரிட்டன் என்பது சந்தையை பொறுத்தது. இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும் ரிஸ்க் குறைவானதே தவிர, ரிஸ்க் இல்லாதது என்று சொல்ல முடியாது.
உங்களுடைய எமர்ஜென்சி ஃபண்ட் என்பது உங்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டுமே தவிர உங்களை எப்பொழுதும் ஒரு பதட்டமான மனநிலையில் வைக்கக்கூடாது. இதன் மூலமாக உங்களுக்கு அதிகபட்ச ரிட்டன்கள் கிடைக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். எனவே உங்களுடைய எமர்ஜென்சி ஃபண்டை பங்குகள் அல்லது முழுக்க முழுக்க சந்தைகளோடு தொடர்புடைய முதலீடுகளுக்கு பயன்படுத்த வேண்டாம். உங்களுடைய நோக்கம் என்பது எமர்ஜென்சி ஃபண்டை உடனடியாக எடுத்து பயன்படுத்தக் கூடிய வகையில் வைக்க வேண்டுமே தவிர, அதனை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்பது கிடையாது.
5 லட்சம் ரூபாயை சேமிப்பது என்பது ஒரு மிகப்பெரிய இலக்காக இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் நீங்கள் பணத்தை சேமிக்கும் போது உங்களுடைய இலக்கு படிப்படியாக அடையபட்டு வருகிறது. உதாரணமாக ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாயை உங்களால் சேமிக்க முடிந்தால் 4 வருடங்களுக்கு உள்ளாகவே எந்த ஒரு வட்டியும் இல்லாமல் உங்களால் 5 லட்சம் ரூபாயை புரட்ட முடியும். ஒரு வேளை உங்களால் இன்னும் அதிகமாக சேமிக்க முடிந்தால் இதைவிட விரைவாகவே உங்களால் இந்த எமர்ஜென்சி ஃபண்டை அமைக்க முடியும்.
எனவே எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்குவது என்பது எதிர்பாராத செலவுகளில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான படியாக அமைகிறது. இதற்கு நீங்கள் அதிக வட்டி வழங்கும் சேமிப்பு கணக்குகள், லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகள், குறுகிய கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட்கள் போன்றவற்றை கருத்தில் கொள்ளலாம். சிறிய அளவில் ஆனால் வழக்கமான சேமிப்பு மூலமாக இதனை நிச்சயமாக உங்களால் செய்ய முடியும்.
August 16, 2025 8:06 AM IST


