• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.4,200 கோடி செலவு.. ஆனால் 12 நாட்களில் விரிசல்.. சாதாரண மழைக்கே சேதமடைந்த எக்ஸ்பிரஸ்வே! | Rs 4,200 Crore Lucknow-Kanpur Greenfield Expressway Develops Cracks Just 12 Days After Opening

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ரூ.4,200 கோடி செலவு.. ஆனால் 12 நாட்களில் விரிசல்.. சாதாரண மழைக்கே சேதமடைந்த எக்ஸ்பிரஸ்வே! | Rs 4,200 Crore Lucknow-Kanpur Greenfield Expressway Develops Cracks Just 12 Days After Opening
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Published: Monday, July 27, 2026, 16:06 [IST]

லக்னோ: பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட லக்னோ கான்பூர் கிரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே திறக்கப்பட்டு, வெறும் 12 நாட்களில் சேதமடைந்துள்ளது. சாதாரண மழைக்கே அந்த சாலை சேதம் அடைந்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு சாலை திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் சில இடங்களில் புதிதாக அமைக்கப்படும் சாலைகள் கூட போதிய தரத்தில் இல்லை. அப்படியொரு சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

India expressway

புதிய சாலை

உத்தரப் பிரதேசத்தில் ரூ.4,200 கோடி செலவில் கட்டப்பட்ட லக்னோ கான்பூர் கிரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே திறந்து வைக்கப்பட்டு வெறும் 12 நாட்களிலேயே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அங்கு சமீபத்தில் கனமழை பெய்த நிலையில், மழைக்கு பிறகு சாலையின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கி விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த எக்ஸ்பிரஸ்வே ரூ.4,200 கோடி செலவில் போடப்பட்டது. கடந்த ஜூலை 13ஆம் தேதி தான் இந்த சாலை திறந்து வைக்கப்பட்டது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இந்த சாலையை திறந்து வைத்தனர்.

கள்ள உறவு காரணமில்லை.. சிங்கப்பூரில் விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்! வினோதமான டேட்டா

கள்ள உறவு காரணமில்லை.. சிங்கப்பூரில் விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்! வினோதமான டேட்டா

விரிசல்

ஆனால், திறப்பு விழா நடைபெற்ற சில நாட்களிலேயே சாலையில் விரிசல் ஏற்பட்டிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில், உன்னாவ் மாவட்டத்தின் கோராரி கிராமம் அருகே சுமார் 5 முதல் 7 மீட்டர் நீளமுள்ள சாலை திடீரென உள்வாங்கி, விரிசல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள் மீது AK-47 துப்பாக்கிச்சூடு! அத்துமீறிய போலீஸ்.. நீட் போராட்டத்தில் உச்சக்கட்ட பதற்றம்!

மாணவர்கள் மீது AK-47 துப்பாக்கிச்சூடு! அத்துமீறிய போலீஸ்.. நீட் போராட்டத்தில் உச்சக்கட்ட பதற்றம்!

விமர்சனம்

இதன் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த சமாஜ்வாதி கட்சியின் மதுசூதன் யாதவி, யோகி அரசை கடுமையாக சாடியுள்ளார். அந்த வீடியோவில் அவர், “லக்னோ கான்பூர் உயர்மட்ட எக்ஸ்பிரஸ்வேயில் பயணம் செய்தேன். கோராரி அருகே சாதாரண மழைக்கே சாலைகளில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. இந்த விரிசலால் பெரிய விபத்து ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தியதே இதற்கு காரணம். பல ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சாலை, இரண்டு வாரங்களுக்குள் இப்படி சேதமடைவது எப்படி?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

“போலீஸ் வரம்பு மீறி நடப்பதை நியாயப்படுத்த முடியாது..” நீட் போராட்டம் தடியடி! உச்ச நீதிமன்றம் கருத்து

அதிகாரிகள்

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். உடனடியாக சாலையை சீர் செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டன. இருப்பினும், சாலை ஏன் இந்தளவுக்கு சேதம் அடைந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கமும் தரப்படவில்லை.

பல ஆண்டுகள் திட்டமிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை, வெறும் சில நாட்களிலேயே சேதமடைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் சாலை கட்டுமானத்தில் ஏதேனும் அலட்சியம் அல்லது முறைகேடு நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

English summary

Rs 4,200 crore Lucknow Kanpur Greenfield Expressway has developed cracks just 12 days after its inauguration(இந்திய நெடுஞ்சாலை சாலை தரம்): Indian highway road condition latest news in tamil.

Read More

Previous Post

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீடிப்பு ; அமைச்சரவை பச்சைக் கொடி

Next Post

IND vs ZIM : ஸ்ரேயாஸின் கேப்டன்சியைப் பாராட்டிய லக்ஷ்மண்.. டிரஸ்ஸிங் ரூமில் நெகிழ்ச்சியான தருணம்! | கிரிக்கெட் செய்திகள்

Next Post
IND vs ZIM : ஸ்ரேயாஸின் கேப்டன்சியைப் பாராட்டிய லக்ஷ்மண்.. டிரஸ்ஸிங் ரூமில் நெகிழ்ச்சியான தருணம்! | கிரிக்கெட் செய்திகள்

IND vs ZIM : ஸ்ரேயாஸின் கேப்டன்சியைப் பாராட்டிய லக்ஷ்மண்.. டிரஸ்ஸிங் ரூமில் நெகிழ்ச்சியான தருணம்! | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin