Last Updated:
கர்நாடக முதல்வர் சித்தராமையா 4 லட்சம் கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பெங்களூரு திட்டங்களுக்கு 21 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கர்நாடகாவில் முதல் முறையாக 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாக, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிராண்ட் பெங்களூரு என்ற பெயரில் 21 திட்டங்களுக்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். பெங்களூரு புறநகர் ரயில் திட்டங்களை செயல்படுத்த 15 ஆயிரத்து 767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தியேட்டர்களிலும் சினிமா டிக்கெட்களுக்கான அதிகபட்ச விலையை 200 ரூபாயாக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்திற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்படும் என்றும் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டார். சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க 150 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இமாம்களுக்கு மாதம் 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இதனை ‘ஹலால் பட்ஜெட்’ என கர்நாடக மாநில பாஜக விமர்சித்துள்ளது.
March 07, 2025 5:39 PM IST
கர்நாடகாவில் முதல் முறை… ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு நிதிநிலை அறிக்கை.. சித்தராமையா தாக்கல் செய்தார்!


