Last Updated:
சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, தீபிகா படுகோனே, ஷாருக்கான் நடித்த பல முன்னணி நட்சத்திரங்களும் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள்.
இந்தியாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான விராட் கோலி, அனுஷ்கா சர்மாவும் தற்போது ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவர்கள் மும்பை அருகே அலிபாக் பகுதியில் 5 ஏக்கர் அளவு கொண்ட நிலத்தை வாங்கியுள்ளார்கள். இதன் மொத்த மதிப்பு 38 கோடி ரூபாய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலத்தை பதிவு செய்வதற்கு முத்திரைத்தாள் கட்டணமாக சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நில ஒப்பந்தம் கடந்த 13ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பிஸியாக இருக்கிறார். இதனால் விராட் கோலிக்கு பதிலாக அவரது சகோதரர் விகாஸ் கோலி ஆவண பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இதேபோன்று அனுஷ்கா சர்மா தரப்பில் அவரது தந்தை அஜய் குமார் சர்மா ஆவணங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு இதே பகுதியில் 8 ஏக்கர் அளவிலான நிலத்தை விராட் கோலி வாங்கி இருந்தார். அந்த பகுதியில் 10 ஆயிரம் அடி சதுர அளவில் மிகப்பெரிய சொகுசு பங்களாவை விராட் கோலி கட்டியிருக்கிறார்.
இந்நிலையில் அதன் அருகே 5 ஏக்கர் நிலத்தை விராட் கோலி வாங்கியுள்ளார். இதன் மூலம் அன்று அவர் பண்ணை இல்லத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


