ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ.300 மதிப்புள்ள போலி நகையை அமெரிக்க பெண்ணிடம் ரூ.6 கோடிக்கு விற்று ஏமாற்றிய சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த செரிஷ் (Cherish) என்பவர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஜோஹ்ரி பஜாரிலுள்ள கடையில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகையை வாங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரலில் அமெரிக்காவில் நடந்த கண்காட்சியில் இந்த நகை காட்சிப்படுத்தப்பட்டபோது அது போலியானது என்று தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த செரிஷ், நேராக ராஜஸ்தானுக்கு வந்து கடை உரிமையாளர் கௌரவ் சோனியை சந்தித்தார். ஆனால், கௌரவ் சோனி அவரின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

