ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.228, ரூ.247, ரூ.269, ரூ.298 மற்றும் ரூ.299 போன்ற விலைகளில் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்தான் அதிக நன்மைகளை வழங்குகின்றன. சரி இப்போது ரூ.300 விலைக்கும் கீழ் அதிக நன்மைகளை வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்:
பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு மாதத்திற்கு தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS, Arena மொபைல் கேமிங் சர்வீஸ் , BSNL ட்யூன்ஸ், ஆஸ்ட்ரோடெல், பிஎஸ்என்எல் டியூன்ஸ் , ஹார்டி மொபைல் சர்வீஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இன்டர்நெட் ஸ்பீட் 40 Kbpsஆக குறைகிறது.
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்:
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்களுக்கு மொத்தம் 50ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிர காலிங், தினமும் 100 SMS மற்றும் டாக் வேல்யூ ரூ.10 உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.
இதையும் படிக்க:
செல்லப்பிராணிகளுக்கான இன்சூரன்ஸ் பற்றி தெரியுமா..? இதனை எப்படி பெறுவது? – விவரம்!
பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்:
பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS, Arena மொபைல் கேமிங் சர்வீஸ், BSNL ட்யூன்ஸ், ஆஸ்ட்ரோடெல் மற்றும் ஹார்டி மொபைல் சர்வீஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ 298 ப்ரீபெய்ட் திட்டம்:
பிஎஸ்என்எல் ரூ 298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 51 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 52ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS மற்றும் டாக் வேல்யூ ரூ.10 உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இன்டர்நெட் ஸ்பீட் 40 Kbpsஆக குறைகிறது.
இதையும் படிக்க:
இனி ரயிலில் காலியாக உள்ள இருக்கைகளை ஈஸியா கண்டுபிடிக்கலாம்… IRCTC வெளியிட்டுள்ள புதிய அம்சம்!
பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்:
பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், 40 Kbpsஆக குறைகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
