வாழ்க்கையில் கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவுமே நிலைக்காது எனக் கூறுவார்கள். இதற்கு நாம் பல உதாரணங்களை காண்பிக்க முடியும். இன்றைக்கு மிகப்பெரும் தொழிலதிபர்களாக இருக்கும் பலரும் இந்த நிலைக்கு மிகவும் எளிதாக வந்துவிட்டார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஆரம்ப காலத்தில் அவர்கள் கடினமாக அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்ததாலேயே இன்று மிகப்பெரும் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.
எல்லார் வாழ்க்கையும் ஒரேப்போன்று இருக்காது. சிலருக்கு வாய்ப்புகளும் வசதிகளும் மிக எளிதாக கிடைக்கும். பலருக்கு எவ்வுளவு உழைத்தாலும் கடைசிவரை அது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனாலும் இதிலும் சில நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் துணிந்து சில முயற்சிகளில் இறங்கி தங்கள் வாழ்க்கைப் பாதையை பாதியிலேயே மாற்றிக்கொண்டு வெற்றியடைகிறார்கள். அப்படியொரு நபர்தான் நிதி யாதவ். இவருடைய வாழ்க்கை கதை புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படும் பலப் பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும்.
Deloitte நிறுவனத்தில் இஞ்சினீயராக நல்ல ஊதியத்தில் பணியாற்றி வந்த நிதி யாதவிற்கு (Nidhi Yadav) ஃபேஷன் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என ரொம்ப நாளாகவே ஆசை. அதை நிறைவேற்றும் பொறுட்டு, ஃபேஷன் துறையில் நிபுணத்துவம் பெறுவதற்காக ஃபுளோரன்ஸில் உள்ள போலிமோடா ஃபேஷன் பள்ளியில் சேர்ந்து ஒரு வருடம் பயிற்சி எடுத்தார். இந்தப் பயிற்சியை முடித்த உடனேயே அவருக்கு இத்தாலியில் வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலையில் சேராமல் தனது குடும்பத்தோடு இந்தியா திரும்பினார் நிதி யாதவ்.
2014-ம் ஆண்டு Aks என்ற நிறுவனத்தை சொந்தமாக தொடங்கினார் நிதி யாதவ். இதற்காக அவர் வெறும் ரூ.3.5 லட்சம் மட்டுமே முதலீடு செய்தார். 18 முதல் 35 வயது வரையுள்ள பெண்களுக்கு நவீன பாரம்பரிய உடைகளை குறைவான விலையில் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த நிறுவனத்தை தொடங்கினார் நிதி யாதவ்.
Aks நிறுவனம் தொடங்கப்பட்ட ஐந்து வருட காலத்திற்குள்ளேயே மிகப்பெரும் வளர்ச்சி அடைந்தது. முதலாம் ஆண்டில் ரூ.1.60 கோடியாக இருந்த வருமானம், அதற்கடுத்த ஆண்டிலேயே ரூ.8.50 கோடி அளவிற்கு உயர்ந்தது. 2018-ம் ஆண்டில் இது ரூ.48 கோடியாக அதிகரித்தது. 2019-20 நிதியாண்டில் மட்டும் இவருடைய நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது. இதற்கெல்லாம் நிதி யாதவின் கடுமையான உழைப்பும் தொழில் நேர்த்தியுமே முக்கிய காரணமாகும்.
2021-ம் ஆண்டில் Aks நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாக உயர்ந்து ரூ.200 கோடியை எட்டியது. 2023-24 நிதியாண்டிற்குள் ரூ.500 கோடியை வருவாயாக ஈட்டுவதே எங்களுடைய இலக்கு என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நிதி யாதவ்.
.
&w=750&resize=750,375&ssl=1)
