தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த நாள் மக்கள் தங்கள் வீடுகளில் அசைவ உணவுகள் சாப்பிடுவது வழக்கம். இதன் காரணமாகச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் தீபாவளி முன்னிட்டு ஆடுகள் விற்பனை இன்று நடைபெற்றது.
வியாபாரிகள் ஆடுகளை ரூ.6,000 முதல் ரூ.25,000 வரை விற்பனை செய்தனர். இந்தச் சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் வர உள்ள நிலையில் ஆட்டுச் சந்தையில் கூட்டம் அலைமோதியது. கறி விற்பனைக்காக ஆடுகளைக் கொண்டு செல்வோர் மொத்தமாக 15 ஆடுகள் வரை விலைபேசி வாங்கிச் சென்றனர்.
மேலப்பாளையம் ஆட்டுச் சந்தைக்கு திருநெல்வேலி மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, தேனி, மதுரையிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஆடுகளைச் சந்தைக்குள் விற்பனை செய்ய மாநகராட்சி சார்பில் சுமார் 3000 வரை டோக்கன் விநியோகிக்கப்பட்டன. ஆடுகளை வியாபாரிகள் பேரம் பேசி விற்றனர். செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் உள்ளிட்ட ஆடுகள் வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.
இதையும் படிங்க: 21 கோபுர தரிசனம் ஒரே இடத்தில்… ஸ்ரீரங்கம் போனால் இதை மிஸ் பண்ணாதீங்க…
கறிக்காக வெளியூர்களுக்குச் செம்மறி ஆடுகள் அதிகமாக விற்பனையாகின. கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள் வெள்ளாடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். ஆட்டின் உயரம், கறியின் அளவு, எடை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கறியின் எடை அதிகரிக்க விலையும் அதிகரித்தது.
கறியைப் பொறுத்து ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.25,000 வரை விற்பனையானது. மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வழக்கமாக ஒரு கோடி முதல் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகும். இன்று வழக்கத்தை விட கூடுதலாக மூன்றரைக் கோடிக்கும் மேல் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
