அதே ஆண்டு வட்டி விகிதத்தில், உங்கள் மாதச் சம்பளத்தில் 30 சதவீதத்திற்கு இணையான ரூ. 7,500-ஐ மாதந்தோறும் முதலீடு செய்தால், 23 ஆண்டுகளில் (அதாவது 276 மாதங்களில்) ரூ. 1 கோடியை எட்ட முடியும். உங்கள் மாதச் சம்பளத்தில் 40 சதவீதத்திற்கு இணையான ரூ. 10,000-ஐ மாதந்தோறும் முதலீடு செய்தால், 20 ஆண்டுகளில் (அதாவது 248 மாதங்களில்) ரூ. 1 கோடியைச் சேர்க்க முடியும். இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளக்கூடியது என்னவென்றால், எவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்கள் இலக்கை அடைய முடியும்.


