• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.24,397 கோடி சொத்து..! இங்கிலாந்தில் படிப்பு, இந்தியாவில் தொழில்

GenevaTimes by GenevaTimes
November 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.24,397 கோடி சொத்து..! இங்கிலாந்தில் படிப்பு, இந்தியாவில் தொழில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவைப் பொறுத்தவரையில், தொழில்முனைவோரின் வாரிசுகளில் ஒரு பகுதியினர் ஒரு கட்டத்தில் அவர்களது தந்தையின் தொழிலை எடுத்து நடத்த ஆரம்பிக்கிறார்கள். மறுபுறம், இன்னொரு பகுதியினர் தாமாகவே சொந்தமாக புதிய தொழிலை ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்னதாக தங்களது திறமையை வளர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று தங்களது உயர்கல்வியை முடிக்கின்றனர். ஆண்களுக்கு இணையாக பெண்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பின்னர், தங்களது பூர்வீக தொழிலையும் முன்னெடுத்து நடத்துகின்றனர்.

அந்த வகையில், யுனைடெட் கிங்டமில் உள்ள நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் ஆர்ட்ஸ் பிரிவில் நிதித் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று இந்தியா திரும்பிய ஒருவரைப் பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

விளம்பரம்

தொழில்முனைவோரைப் பொறுத்தவரையில், பெண்களும் தங்கள் குடும்பத் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அத்தகைய ஒரு நபர் தான் அலிஷா மாலிக். மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட் என்ற காலணி நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக இருக்கிறார். இவர் இந்திய கோடீஸ்வரரும், மெட்ரோ பிராண்டுகளின் தலைவருமான ரஃபீக் மாலிக்கின் மகள் ஆவார். மெட்ரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.32,770 கோடி ஆகும்.

இதையும் படிக்க:
Post Office திட்டத்தில் ரூ.8 லட்சம் முதலீடு செய்தால் மாதம் எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோ!

விளம்பரம்

அலிஷாவின் தந்தை ரஃபீக் மாலிக்கின் சொத்து மதிப்பு ரூ.24,397 கோடி என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

மெட்ரோ நிறுவனம் 1955 ஆம் ஆண்டு அலிஷாவின் தாத்தா மாலிக் தேஜானியால் மும்பையில் ஒரு காலணி கடையாக நிறுவப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் டிசம்பர் 2021 இல் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அலிஷா யுனைடெட் கிங்டமில் உள்ள, நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் ஆர்ட்ஸ் பிரிவில் நிதித் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

அவர் செப்டம்பர் 1, 2024 முதல் மெட்ரோ பிராண்டுகளின் குழுவில் முழு நேர இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

விளம்பரம்

அலிஷா 2009 இல் மெட்ரோ நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் பின்னர், அவர் புதிய வணிக முயற்சிகளை முன்னெடுப்பதில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். மெட்ரோவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் இருப்புக்குப் பின்னால் இருக்கும், இளம் பெண் தொழில்முனைவோராக தற்போது தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

கல்லீரல் பாதிப்பின் 8 எச்சரிக்கை அறிகுறிகள்.!


கல்லீரல் பாதிப்பின் 8 எச்சரிக்கை அறிகுறிகள்.!

நிறுவனத்தின் வளர்ச்சிக்கான புதிய யோசனைகள் மற்றும் உத்திகளை அறிமுகப்படுத்துவதில் அவர் ஒரு முக்கிய தலைவராக இருந்து வருகிறார். அவரது மூத்த சகோதரி, ஃபரா மாலிக் பாஞ்சி, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

விளம்பரம்

அலிஷாவின் தலைமை மற்றும் மேற்பார்வையின் கீழ், மெட்ரோ பிராண்ட் நிறுவனம் மெட்ரோ, மோச்சி மற்றும் வாக்வேயின் இ-காமர்ஸ் தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கோடிட்டுக் காட்டக்கூடிய இ-காமர்ஸ், ஓம்னிசேனல் மற்றும் புதிய சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஒரு சிறந்த வணிக வளர்ச்சிக்கான உத்தியை அவர் கட்டமைத்து இருக்கிறார்.

‘மாற்றம் மட்டுமே நிலையானது’ என்ற மேற்கோளுக்கு அலிஷா முன்மாதிரியாக விளங்குகிறார். மெட்ரோ பிராண்ட்ஸ் இந்தியா முழுவதும் 198 நகரங்களில் 873 கடைகளுடன் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது என்று மெட்ரோ நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

தென்னிந்திய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு எப்படி இருக்கிறது? டெல்லியின் நிலை என்ன? முழு விவரம் இதோ!

Next Post

மலேசியாவின் பிரகாசம்தான் டைம்-இன் கனவு

Next Post
மலேசியாவின் பிரகாசம்தான் டைம்-இன் கனவு

மலேசியாவின் பிரகாசம்தான் டைம்-இன் கனவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin