Last Updated:
பெங்களூருவில் பிரஸ்டீஜ் சன்ரைஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில், பொதுவான பகுதியில் shoe rack வைத்ததற்காக நபருக்கு ரூ. 24,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் பொதுவான பகுதியில் shoe rack-ஐ வைத்ததற்காக நபர் ஒருவருக்கு ரூ. 24,000 அபராதம் விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் பிரஸ்டீஜ் சன்ரைஸ் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 1046 வீடுகள் கொண்ட அந்த அடுக்குமாடி கட்டடத்தில், அனைவரும் புழங்கும் காரிடார் பகுதியில் ஷூ ரேக், பூந்தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி உள்ளது.
இந்த குடியிருப்பில் வசிக்கும் 50 விழுக்காடு மக்கள் தங்கள் பொருட்களை காரிடார் பகுதியில் வைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பிறருக்கு இடையூறாக இருக்கும் வகையில் பொருட்களை வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியதுடன், அவற்றை அகற்ற 2 மாதங்கள் அவகாசமும் அளிக்கப்பட்டது.
இதில் பெரும்பாலானோர் தங்கள் வீட்டு வாசலில் வைத்திருந்த பொருட்களை எடுத்துவிட்டனர். ஆனால், அந்த குடியிருப்பில் இருந்த ஒருவர் மட்டும் விதிகளை மீறி, ஷூ ரேக்கை காரிடார் பகுதியில் வைத்ததற்காக இதுவரை 8 மாதங்களில் ரூ. 24,000 அபராதமாகவும் செலுத்தியுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்புகளின் தீயணைப்பு விதிகளின்படி, பொதுமக்கள் புழங்கும் காரிடார் பகுதியில் எந்த பொருட்களும் வைக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Bangalore Rural,Karnataka


