Last Updated:
UAE Golden Visa | இந்தியா, வங்கசேதத்தை சேர்ந்தவர்கள் அமீரகத்தில் எந்த தொழிலோ அல்லது சொத்துக்களில் முதலீடோ இல்லாமல் கூட வாழ்நாள் கோல்டன் விசா பெறலாம் என சில விசா ஏஜென்சிகள் விளம்பரம் செய்தன.
23 லட்சம் ரூபாய்க்கு வாழ்நாள் கோல்டன் விசா வழங்கப்படும் என பரவும் தகவல்கள் வெறும் வதந்தியே என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இந்தியா, வங்கசேதத்தை சேர்ந்தவர்கள் அமீரகத்தில் எந்த தொழிலோ அல்லது சொத்துக்களில் முதலீடோ இல்லாமல் கூட வாழ்நாள் கோல்டன் விசா பெறலாம் என சில விசா ஏஜென்சிகள் விளம்பரம் செய்தன. இதற்கு வெறும் 23 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதுமானது என்றும் அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதனை ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு ஆணையம் மறுத்துள்ளது.
இந்த அறிவிப்புகள், அமீரக அரசுத்துறைகளின் ஒப்புதல் இன்றி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்டுள்ளது.
மேலும் எந்த ஏஜென்சி மூலமும் கோல்டன் விசா பெற முடியாது என்றும், அதற்காக அமைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான டிஜிட்டல் தளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க முடியம் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.
July 10, 2025 8:16 PM IST