• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரூ. 225 கோடி கொடுத்து சமரச பேச்சு முடிந்தது?

GenevaTimes by GenevaTimes
March 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரூ. 225 கோடி கொடுத்து சமரச பேச்சு முடிந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் புது திருப்பமாக நீதிமன்றத்திற்கு வெளியே பேசி ரூ. 225 கோடி கொடுத்து எல்லாம் முடிவாகிவிட்டதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. சங்கீதாவுக்கு ரூ. 225 கோடி எல்லாம் குறைவு என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

 

விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சங்கீதா சொர்ணலிங்கம். அந்த வழக்கு ஏப்ரல் 20ம் திகதி விசாரணைக்கு வருகிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி முடிவு செய்து கொள்ளலாம். அதனால் விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுமாறு சங்கீதாவிடம் கேட்டிருக்கிறார் விஜய் என்று தகவல் வெளியானது.


இந்நிலையில் சமரச பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைத்துவிட்டதாகவும், சங்கீதா, பிள்ளைகளுக்கு சேர்த்து ரூ. 225 கோடி கொடுக்க விஜய் சம்மதித்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விவாகரத்து கோரி தான் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுவிட்டாராம் சங்கீதா. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே விஜய், சங்கீதா மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர் ஒருவர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் பிரார்த்தனை செய்திருக்கிறார். விஜய், சங்கீதாவின் புகைப்படத்துடன் அவர் முட்டியிட்டு நடந்து சென்று வேண்டியதை பார்த்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.


முன்னதாக தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்திற்கு வந்த விஜய் கட்சி நிர்வாகியும் தளபதி, சங்கீதாவின் புகைப்படத்துடன் வந்தார். கூட்டம் நடந்த இடத்தில் அவர் அந்த புகைப்படத்தை உயர்த்திப் பிடிக்கவே அதை பலரும் வீடியோ எடுத்தார்கள்.


விஜய் மீது சங்கீதா வைத்த புகாரால் தான் அந்த விவாகரத்து வழக்கு மீது மக்களின் கவனம் திரும்பியது. ஃபேமிலி மேன் என்று பெயர் எடுத்த விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக புகார் தெரிவித்தார் சங்கீதா. 2021ம் ஆண்டில் அந்த உறவு குறித்து கண்டுபிடித்து கேள்வி கேட்டதற்கு, முதலில் விட்டுவிடுகிறேன் என்று கூறினார் விஜய். பின்னர் குற்ற உணர்வே இல்லாமல் நடிகையுடனான தொடர்பை தொடர்ந்தார்.


நடிகையும், விஜய்யும் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றார்கள். அப்பொழுது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அந்த நடிகை வெளியிட்டதால் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. விஜய் தன்னை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார் சங்கீதா. இருப்பினும் விஜய்யுடன் இருக்கும் நடிகையின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை.


விஜய்யை பிரிந்த சங்கீதா லண்டனில் இருக்கும் தங்களின் குடும்ப பிசினஸை கவனிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறாராம். சங்கீதா ரூ. 400 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார். லண்டனில் படித்த அவர், விஜய்யின் பூவே உனக்காக படம் பார்த்து தளபதியை பிடித்துப் போய் நேரில் பார்க்கும் ஆசையில் சென்னை வந்தார்.


விஜய்யை மட்டும் அல்ல அவரின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபாவையும் சந்தித்து பேசினார். சங்கீதாவை பிடித்துப் போகவே இவர் தான் நம் வீட்டு மருமகளாக வேண்டும் என்று முடிவு செய்து சங்கீதாவை கல்யாணம் செய்து கொள்கிறாயா என விஜய்யிடம் கேட்டிருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். விஜய்யும் சம்மதம் தெரிவிக்கவே லண்டன் சென்று சங்கீதா குடும்பத்தை சந்தித்து நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து பின்னர் திருமணம் நடந்திருக்கிறது.



Read More

Previous Post

பிகேஆர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கட்சி விதிகளைப் பின்பற்ற மட்டுமே கூறப்பட்டுள்ளது என்கிறார் ரஃபிஸி | Makkal Osai

Next Post

IND vs NZ | ஃபைனலில் இந்தியா எடுக்கும் கடின முடிவு… இரு வீரர்கள் நீக்கம்? – சூர்யகுமார் யாதவ் கொடுத்த பிளேயிங் லெவன் அப்டேட்!

Next Post
IND vs NZ | ஃபைனலில் இந்தியா எடுக்கும் கடின முடிவு… இரு வீரர்கள் நீக்கம்? – சூர்யகுமார் யாதவ் கொடுத்த பிளேயிங் லெவன் அப்டேட்!

IND vs NZ | ஃபைனலில் இந்தியா எடுக்கும் கடின முடிவு... இரு வீரர்கள் நீக்கம்? - சூர்யகுமார் யாதவ் கொடுத்த பிளேயிங் லெவன் அப்டேட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin