ஆண்டுக்கு ரூ. 16 கோடி சம்பளமாக பேசப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்பை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ஷேன் வாட்சன் நிராகரித்துள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹபீஸ் இருந்து வருகிறார். இவரது வழிகாட்டுதலின் கீழ் பாகிஸ்தான் அணி குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெறவில்லை. இதனால் அணி மீதும் பயிற்சியாளர் மீதும் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். பெரும்பாலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களே அந்த அணிக்கு பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டு வரும் நிலையில் வெளிநாட்டை சேர்ந்த தரமான வீரர்களை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இதற்காக அவர் ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் (ரூ. 16 கோடி) கேட்டுள்ளதாகவும், இதனை கொடுப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில், அந்த பொறுப்பை ஏற்பதற்கு ஷேன் வாட்சன் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். சம்பள பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானின் கராச்சியில் இருந்த அவர், அங்கிருந்து நேற்று ஆஸ்திதேலியா திரும்பி விட்டார். அவர் கேட்ட தொகையை கொடுப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்ட நிலையில், எதற்காக அவர் பின் வாங்குகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. சம்பளத் தொகை குறித்த பேச்சுவார்த்தையை வாட்சன் ரகசியமாக வைத்திருந்ததாகவும், அவை பாகிஸ்தான் ஊடகங்களில் கசிந்ததால் அவர் அப்செட் ஆகி, பொறுப்பை நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பதில் அளித்த வாட்சன், ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர் பணி, யு.எஸ்.ஏ. லீக் போட்டிகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புவதால் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை தவிர்த்ததாக கூறியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலக டி20 கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, நீண்ட கால அடிப்படையில் தேசிய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டுகிறது.
வாட்சன் விலகியிருப்பதால் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்களான யூனிஸ் கான், முகமது யூசுப், இன்சமாம் உல் ஹக், மொயின் கான் ஆகியோர் பயிற்சியாளர்களுக்கான பரிசீலனை பட்டியலில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…