Last Updated:
முதலில் சிறிய லாபத்தைக் காட்டி நம்பிக்கையைப் பெறுவார்கள், பின்னர் பெரிய தொகைகள் வந்தவுடன் அக்கவுன்ட்களை பிளாக் செய்வார்கள். பணம் எடுக்க முயற்சிப்பவர்களை மிரட்டி, மேலும் டெபாசிட் செய்ய வற்புறுத்துவார்கள். இந்த வழியில், நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றினர்.
பிரபலமான நெட்ஃபிளிக்ஸ் தொடரான “மணி ஹீஸ்ட்” என்ற வெப் சீரிஸ்-ஐ பின்பற்றி டெல்லியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், அதைப் பின்பற்றி நாடு முழுவதும் ரூ.150 கோடி மோசடி செய்துள்ளனர்.
மணி ஹீஸ்ட் தொடரின் கதாபாத்திரங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, ஆன்லைன் மோசடி மூலம் கூடுதலாக ரூ.23 கோடியை மோசடி செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி போலீசார் முக்கிய குற்றவாளிகளான அர்பித், பிரபாத் மற்றும் அப்பாஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்த நபர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானம் தருவதாக வாக்குறுதி அளித்து சமூக ஊடகங்கள் மூலம் மக்களை ஏமாற்றினர். காவல்துறையினரின் கூற்றுப்படி, அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைக்க வெப் சீரிஸால் ஈர்க்கப்பட்ட போலி பெயர்களைப் பயன்படுத்தியதாக தெரிவித்தனர்.
வழக்கறிஞர் அர்பித் பேராசிரியராகவும், கணினி அறிவியல் பட்டதாரி பிரபாத் வாஜ்பாய் அமண்டாவாகவும், அப்பாஸ் ஃப்ரெடியாகவும் தங்கள் உண்மையான பெயரை மாற்றிக் கொண்டனர். அவர் வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் பல ரகசிய குழுக்களை உருவாக்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்து மக்களை கவர்ந்து, முதலீடு செய்ய தூண்டினார்.
அவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் டஜன் கணக்கான குழுக்களை உருவாக்கி, பங்குச் சந்தையில் ஆலோசனைகளையும், குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் தங்கள் மூலம் முதலீடு செய்தால் சிறந்த வருமானம் கிடைக்கும் என்று மக்களிடம் உறுதியளித்தனர்.
முதலில் சிறிய லாபத்தைக் காட்டி நம்பிக்கையைப் பெறுவார்கள், பின்னர் பெரிய தொகைகள் வந்தவுடன் அக்கவுன்ட்களை பிளாக் செய்வார்கள். பணம் எடுக்க முயற்சிப்பவர்களை மிரட்டி, மேலும் டெபாசிட் செய்ய வற்புறுத்துவார்கள். இந்த வழியில், நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றினர். இந்தக் கும்பல் சொகுசு ஹோட்டல்களில் தங்கி, அங்கிருந்து தங்கள் போன்கள் மற்றும் லேப்டாப்களை மட்டுமே பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, நொய்டா மற்றும் மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் 11 போன்கள், 17 சிம் கார்டுகள், 12 பாஸ்புக்குகள்-செக் புக்குகள், 32 டெபிட் கார்டுகள் மற்றும் ஏராளமான ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன்கள் மற்றும் வாட்ஸ்அப் சேட்களின் ஸ்கிரீன் ஷாட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பரிவர்த்தனைகள், கால் ரெக்கார்டுகள் மற்றும் இன்டர்நெட் லாக்குகளை ஆராய்ந்த பிறகு, சில சீன சந்தேக நபர்களும் மோசடியில் ஈடுபட்டிருப்பதை போலீசார் அறிந்து கொண்டனர். இதே கும்பல் பல்வேறு ஆன்லைன் முறைகள் மூலம் மேலும் ரூ.23 கோடியைக் கொள்ளையடித்துள்ளனர்.
இந்த வழக்கில் சீனாவில் இருந்து செயல்படும் சைபர் மோசடி நெட்வொர்க்கில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் மற்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளைத் தேடி வருகின்றனர்.
November 08, 2025 6:56 PM IST


