• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ரூ.1200க்கு அன்லிமிடெட் பீர்.. ஆனால் ஒரு கண்டிஷன்..” விபரீத விளம்பரம் செய்த மதுபான கடைகளுக்கு செக்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“ரூ.1200க்கு அன்லிமிடெட் பீர்.. ஆனால் ஒரு கண்டிஷன்..” விபரீத விளம்பரம் செய்த மதுபான கடைகளுக்கு செக்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 13, 2026 8:41 PM IST

ரூ.1,200 பணம் செலுத்தினால் ‘அன்லிமிடெட் பீர்’ தருகிறோம்… ஆனால் இடையில் சிறுநீர் கழிக்கக்கூடாது. கொளுத்தும் வெயிலுக்கு மோர், இளநீருக்கு பதிலாக பீர் குடியுங்கள். கவர்ச்சியாக விளம்பரம் செய்த மதுபான கடைகளுக்கு அதிரடியாக ‘சீல்’ வைத்துள்ளனர் அதிகாரிகள். நடந்தது என்ன?.

கடைக்கு சீல் வைக்கப்படுகிறது
கடைக்கு சீல் வைக்கப்படுகிறது

வெயிலுக்கு இதமாக இளநீர், மோர் குடிப்பதற்கு பதில் ஜில்லுன்னு பீர் குடிங்க என்றும், அன்லிமிடெட் பீர் ஆஃபர் என்றும் கவர்ச்சி விளம்பரம் செய்த மதுபான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

யூனியன் பிரதேசமான புதுச்சேரி கலால் வருவாயை பெரிதும் நம்பியுள்ளது. புதுச்சேரி முழுவதும் மதுபான கடைகளோடு, கேளிக்கை விடுதிகள் நிறைந்த ரெஸ்டோ பார்கள் அதிகமாக உள்ளன. மது குடிப்பதற்காகவே புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வார இறுதி நாட்களில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரெஸ்டோ பார்கள் மற்றும் மதுபான கடைகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மது பிரியர்களை கவருவதற்கு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பல்வேறு ஆஃபர்களோடு புதிய விளம்பர வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரியை பொருத்தவரை கலால் துறை விதிகளின்படி மதுபானக் கடைகள் மற்றும் மதுபான கேளிக்கை விடுதிகள் தங்களது வளாகங்களில் வாடிக்கையாளர்களை மது அருந்தத் தூண்டும் வகையிலோ அல்லது மது விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலோ விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு தடை உள்ளது.

இதையும் படிங்க: ஐடி நிறுவன ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! ஹெல்மெட் திருட்டு புகாரால் அம்பலமான பைக் திருட்டு..

அதையும் மீறி, சில மதுபான கடைகள் சலுகைகளைக் குறிப்பிட்டு வாசல்களிலும், பொது இடங்களிலும் பேனர்களை வைத்துள்ளன. இதனிடையே புதுச்சேரி, திருவள்ளுவர் சாலையில் செயல்படும் ஒரு ரெஸ்டோ பாரின் உரிமையாளர், மதுப்பிரியர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகளோடு வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இதேபோல் புதுச்சேரி கருவடிகுப்பத்தில் தனியார் மதுபான கடை ஒன்றில் “வெயிலுக்கு இளநீர், மோர் குடிக்காமல் பீர் குடியுங்கள், ரூ.1200 எத்தனை பீர் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் இடையில் சிறுநீர் கழித்தால் அந்த சலுகை இல்லை” என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கலால்துறைக்கு புகார்கள் சென்ற நிலையில் விதிகளை மீறிய தனியார் மதுபார் மற்றும் ரெஸ்டோ பாருக்கு கலால்துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் கலால்துறை அதிகாரிகள் கடைகளுக்கு அதிரடியாக ‘சீல்’ வைத்தனர். மேலும் அந்த தனியார் மதுபார்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியதோடு இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட வீடியோக்களையும் நீக்கி உள்ளனர்.

Read More

Previous Post

உம்ரா புனிதப் பயணம் செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Next Post

என்னங்க ஐடி வேலை.. முடி திருத்தும் வேலையிலேயே மாசம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்..!! | Mumbai Barber Earns Nearly Rs 1 Lakh a Month Through Urban Company Gig Work, Says No to Government Job

Next Post
என்னங்க ஐடி வேலை.. முடி திருத்தும் வேலையிலேயே மாசம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்..!! | Mumbai Barber Earns Nearly Rs 1 Lakh a Month Through Urban Company Gig Work, Says No to Government Job

என்னங்க ஐடி வேலை.. முடி திருத்தும் வேலையிலேயே மாசம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்..!! | Mumbai Barber Earns Nearly Rs 1 Lakh a Month Through Urban Company Gig Work, Says No to Government Job

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin