Last Updated:
கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி, டெல்லியில் உள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) அலுவலகத்திலிருந்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்று வந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் நௌபஸ்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஹன்ஸ்புரம் ஆவாஸ் விகாஸ் காலனியில் வசிக்கும் பாதுகாவலர் ஓம்ஜி சுக்லாவுக்கு திடீரென ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி, டெல்லியில் உள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) அலுவலகத்திலிருந்து அவருக்கு ஒரு அறிவிப்பு வந்தது. அதில் அவரது பெயரில் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு சுமார் ரூ.3 கோடியே 14 லட்சம் GST வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தி சுக்லாவையும், அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த வழக்கு கான்பூர் நகரின் நௌபாஸ்தா காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஆவாஸ் விகாஸ் ஹன்ஸ்புரத்தைச் சேர்ந்தது. இங்கு வசிக்கும் 22 வயதான ஓம்ஜி சுக்லா, காகதேவில் அமைந்துள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் இரவில் பாதுகாவலராகப் பணிபுரிகிறார். ஓம்ஜி சுக்லாவின் சம்பளம் தோராயமாக ரூ.10,000 ஆகும். இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தபால் மூலம் ஒரு பக்க அறிவிப்பு வந்தது. அவர் அதை தனது அண்டை வீட்டாரிடம் காட்டியபோது, அது போலியானது என்று அவர்கள் கூறினர், ஆனால் ஓம்ஜி முன்னெச்சரிக்கையாக அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தார். இதனையடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று, தபால்காரர் மீண்டும் வந்து 32 பக்கங்கள் கொண்ட விரிவான அறிவிப்பைக் கொடுத்தார். அதில் ஓம்ஜியின் முகவரி மற்றும் பான் எண் இருந்தது மட்டுமல்லாமல், அதில் ரூ.17 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும், அதற்கு ரூ.3 கோடிக்கும் அதிகமான வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர 7 நாட்களுக்குள் அனைத்து ஆவணங்களுடனும் துறை முன்பு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இது குறித்து சுக்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது, தனது பான் கார்டு நிறுவனங்களை அமைக்க தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். எனவே, இந்த மோசடியின் பின்னணியில் உள்ள குற்றவாளியைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர், நான் டெல்லி CGSTயில் இருந்து ரூ.3 கோடி வரி செலுத்த வேண்டும் என்ற நோட்டீஸ் பெற்றேன். யாரோ என் பான் கார்டை தவறாகப் பயன்படுத்தி என் பெயரில் நிறுவனங்களை நிறுவியுள்ளனர். அவர்கள் ரூ.17 கோடி மதிப்பிலான ஆடைகளை வியாபாரம் செய்துள்ளனர், ஆனால் அவர்கள் வரி செலுத்தவில்லை.
இதன் காரணமாக என்னுடைய முகவரிக்கு நோட்டீஸ் வந்தது. இந்த நோட்டீஸ் வந்ததற்குப் பிறகு யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இருப்பினும், இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதனால் என் மீது மோசடி நடந்துள்ளது என தெரியவந்தது. எனவே, இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர், இன்று நான் பாதிக்கப்பட்டவராக இருக்கிறேன், நாளை இது வேறொருவருக்கு நடக்கலாம். இது மீண்டும் நடக்காமல் இருக்க, குற்றவாளி மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
September 01, 2025 6:11 PM IST


