Last Updated:
இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகவும் பிராண்ட் அம்பாசிடர் ஆகவும் எம் எஸ் தோனி இருந்து வருகிறார்
எம்.எஸ். தோனி பிராண்ட் அம்பாசிடராகவும் பங்குதாரராகவும் இருந்து வரும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு கருடா ஏரோஸ்பேஸ் ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தற்போது 24 ஆயிரம் சதுர அடி வசதியில் இந்த நிறுவனத்துடைய பணிகள் நடைபெறுகின்றன. இதனை கூடுதலாக 35 ஆயிரம் அடி சதுர அடியுடன் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள வசதிகள் மூலம் ஆண்டுக்கு குறைந்தது 8000 முதல் 10 ஆயிரம் ரூபாய்களை இந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
இந்த நிலையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் டோன்கள் வரை உற்பத்தி செய்ய முடியும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்னேஸ்வர் ஜெயப்ரகாஷ் கூறியுள்ளார்.
இந்தியாவின் தொழில் நுட்ப நிலப்பரப்பை மாற்றி அமைத்து சமூக பொருளாதார தாக்கத்தை உருவாக்கும் வகையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் செயல்படுவதாக அந்த நிறுவனத்திற்கு முதலீடு வழங்கியுள்ள வென்ச்சர் கேட்டலிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அபூர்வா ரஞ்சன் சர்மா தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஐந்து பேர் கொண்ட குழுவுடன் இந்த கருடா ஏரோஸ்பேஸ் தொடங்கப்பட்டது. தற்போது 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனமாக இது வளர்ந்து இருக்கிறது. இந்த நிறுவனம் 84 நகரங்களில் 400க்கும் அதிகமான ட்ரோன்களை சுமார் 500 விமானங்களை கொண்டு இயக்கி வருகிறது.
இந்த நிறுவனம் 30 வகையான டிரோன்களை உற்பத்தி செய்வதுடன் 50 வகையான சேவைகளையும் வழங்கி வருகிறது. டாடா, கோத்ரேஜ், அதானி, ஸ்விக்கி, ஃப்ளிப்கார்ட், டெலிவரி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கருடா ஏரோஸ்பேஸின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகவும் பிராண்ட் அம்பாசிடர் ஆகவும் எம் எஸ் தோனி இருந்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
April 17, 2025 8:32 PM IST


