Last Updated:
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது பணம் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா இதுவரை பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. அவரது வீட்டில் தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தை மறைத்து வைத்திருப்பதை பார்த்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நீதிபதி வீட்டில் பெரும் அளவுக்கு பணம் இருக்கும் விபரங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இந்தப் பண விவகாரத்தை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தைக் அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அவர் ஏற்கனவே பணிபுரிந்த அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து கொலிஜியம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு எவ்வளவு செலவானது? மத்திய அரசு வெளியிட்ட கணக்கு
சர்ச்சையில் சிக்கி இருக்கும் நீதிபதி யஸ்வந்த் வர்மா உத்தரபிரதேச அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர். பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக பணி அமர்த்தப்பட்டார். ஐந்தாண்டுகளுக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தீ விபத்து நடந்தபோது நீதிபதி யஷ்வந்த் வர்மா டெல்லியில் இல்லை. அவர் வீட்டில் இருந்த உறுப்பினர்கள் தான் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ரூ.100 கோடி வைத்திருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. சர்ச்சையை தொடர்ந்து நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா இதுவரை பணியிட மாற்றம் செய்யப்படவில்லை எனவும் உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
March 21, 2025 6:28 PM IST


