Last Updated:
சுமார் 128 கிராம் எடையுடைய தன்னுடைய தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை சிவா என்பவர் மறந்து வைத்து சென்று விட்டார்.
மதுரையை சேர்ந்த ஏழுமலையான் பக்தர் சிவா சாமி கும்பிடுவதற்காக 4-ஆம் தேதியான நேற்று திருப்பதி மலைக்கு குடும்பத்துடன் வந்து வழிபட்டார். இன்று தங்கி இருந்த அறையை காலி செய்து செல்லும்போது சுமார் 128 கிராம் எடையுடைய தன்னுடைய தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை அங்கு மறந்து வைத்து சென்று விட்டார்.
அவர்கள் சென்ற பின் அந்த கெஸ்ட் ஹவுஸில் மேலாளர் துக்காராம், கண்காணிப்பாளர் வெங்கடமுனிஆகியோர் அறையில் பக்தர்கள் ஏதாவது பொருட்களை விட்டு சென்று இருக்கிறார்களா என்று சோதனை செய்தனர்.
அப்போது சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை சிவா விட்டு சென்று இருப்பது தெரியவந்தது.
அவற்றை எடுத்த இரண்டு பேரும் உடனடியாக தேவஸ்தான சூப்ரிண்டெண்ட்கள் குமாரசாமி, பாஸ்கர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
அறை வாங்கும் போது சிவா கொடுத்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய அவர்கள் சிவாவை வரவழைத்து உரிய ஆதாரங்களை சரி பார்த்து கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவற்றை சிவாவிடம் ஒப்படைத்தனர்.
July 05, 2025 6:46 PM IST
ரூ. 10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை விட்டுச் சென்ற பக்தர்கள்.. பத்திரமாக ஒப்படைத்த ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு