ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) EPF உறுப்பினர்களுக்கு வசதியை விரிவுபடுத்துவதற்காக வீட்டுவசதி, மருத்துவம், கல்வி அல்லது திருமணம் ஆகியவற்றிற்கான தானியங்கி முறையில் தீர்வுக்கான விதிகளை எளிமைப்படுத்தியுள்ளது. அவசரநிலையின் போது உறுப்பினர்களுக்கு நிதியைப் பெறுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில், EPFO-ன் புதிய எளிமைப்படுத்தப்பட்ட விதிகள் மூலம் பயனடையக்கூடிய சுமார் ஆறு கோடி PF கணக்கு வைத்திருப்பவர்கள் உள்ளனர். முன்னதாக, தகுதி நிலை, KYC நிலை, வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற உறுப்பினர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதால், திரும்பப் பெறுவதற்கு சுமார் 15-20 நாட்கள் ஆகும், ஆனால் இப்போது தானியங்கி அமைப்பு மூலம் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் அதைச் செய்யலாம்.
EPFO கிளைம் செய்வதற்கான தகுதி:
ஆட்டோ-மோட் செட்டில்மென்ட் வசதி 2020-ல் EPFO-ஆல் தொடங்கப்பட்டது. இருப்பினும், முன்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மருத்துவ காரணங்களுக்காக பணத்தைக் கோரலாம். ஆனால் இப்போது, கல்வி, வீட்டு வசதி அல்லது திருமணம் போன்றவற்றிற்காக உறுப்பினர்கள் இப்போது திரும்பப் பெறலாம் என்பதால் வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு பணம் கோரலாம்?
மேற்கூறிய காரணங்களுக்காக கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.1 லட்சம் வரை கோரலாம். முன்னதாக, வரம்பு ரூ.50,000 வரை இருந்தது.
உங்கள் EPFO தொகையைப் பெறுவதற்கான வழிகள்:
1. உங்கள் பாஸ்வேர்ட் மற்றும் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) பயன்படுத்தி EPFO போர்ட்டலில் உள்நுழைக.
2. ‘ஆன்லைன் சேவைகள்’ பிரிவில் சென்று ‘கிளைம்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
3. உங்கள் கணக்கு விவரங்களைச் சரிபார்த்து, ‘ஆன்லைன் கிளைமுக்குச் செல்லவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
4. உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். ‘PF அட்வான்ஸ் டிவம் 31’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Also Read |
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!
5. ‘PF கணக்கு’ என்பதைத் தேர்ந்தெடுத்து, முன்கூட்டிய கோரிக்கைக்கான காரணம், முகவரி போன்ற தொடர்புடைய விவரங்களை நிரப்பவும்.
6. உங்கள் காசோலை புத்தகம் அல்லது பாஸ்புக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை நீங்கள் பதிவேற்ற வேண்டும்.
7. உங்கள் ஒப்புதலை வழங்கவும், அதை உங்கள் ‘ஆதார் அட்டை’ மூலம் சரிபார்க்கவும். அதுவே உங்கள் எம்ப்லாயரின் ஒப்புதலுக்காகச் செல்லும்.
8. ஆன்லைன் சேவைகள் மூலம் கிளைம் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)