• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் அதிபர்; இந்தியாவின் பணக்கார நபர்களில் ஒருவர்; யார் இந்த விக்ரம் லால் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 12, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் அதிபர்; இந்தியாவின் பணக்கார நபர்களில் ஒருவர்; யார் இந்த விக்ரம் லால் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழிலதிபர் குடும்பத்தின் வெற்றிக் கதையை தான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம். இந்திய தொழில் வட்டாரத்தில் வலிமை வாய்ந்தவராக கருதப்படும் விக்ரம் லால், அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர் ஆவார். இவரது தலைமையின் கீழ்தான் Eicher Motors நிறுவனம் பல முன்னேற்றங்களைக் கண்டது.

1942ம் ஆண்டு பிறந்த விக்ரம் லால், ஜெர்மனியில் உள்ள Technische Universitat Darmstadt பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்டத்தைப் பெற்றார். படிப்பை முடித்ததும் 1966ம் ஆண்டு தன்னுடைய தந்தை தொடங்கிய Eicher India நிறுவனத்தில் சேர்ந்தார். 1959ம் ஆண்டு முதல் ஜெர்மன் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து டிராக்டர்களை உற்பத்தி செய்துவந்தது Eicher India நிறுவனம்.

விளம்பரம்

ஆரம்பத்தில் டிராக்டர் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்த Eicher India நிறுவனம், 1986ம் ஆண்டு முதல் வர்த்தக வாகனங்களை தயாரிக்கத் தொடங்கியது. இது முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து கனரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த தொடங்கி, இந்திய வர்த்தக வாகனச் சந்தையில் தன்னிகரற்று திகழ்கிறது.

Eicher மோட்டார் நிறுவனத்தின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) கருதப்படுகிறது. உலகிலேயே தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டுவரும் பழமையான மோட்டார் சைக்கிளான இது, பல தலைமுறைகள் கடந்தும் பலரது விருப்பத்திற்குரிய வாகனமாக இருந்து வருகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
Gold Rate Today | மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

விக்ரம் லாலின் மனைவி அனிதா லால், Good Earth-ன் நிறுவனராக இருந்து வருகிறார். சிறந்த கைவினைத்திறன் மற்றும் வடிவமைப்பிற்கு பெயர்பெற்ற இந்நிறுவனம், ஆடம்பர சொகுசு வீடுகள் மற்றும் ஆடை விற்பனைக் கடைகளை நடத்தி வருகிறது. தற்போது விக்ரம் லாலின் மகள் சிம்ரன் லால் Good Earth நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கிறார். கலை மற்றும் கலாச்சாரத்தில் இவருக்கு இருக்கும் ஆர்வம் Good Earth-ன் பொருட்களில் தெரிகிறது. இதுமட்டுமின்றி Nicobar என்ற பெயரில் லைஃப்ஸ்டைல் பிராண்டின் இணை நிறுவனராகவும் இவர் இருந்து வருகிறார்.

விளம்பரம்

இந்த தம்பதிகளின் மகனான சித்தார்தா லாலும் Eicher Motors நிறுவனத்தின் முக்கியமான பதவியை வகித்து வருகிறார். தற்போது மேலாண்மை இயக்குனராக பதவி வகித்துவரும் இவர், Royal Enfield பைக்கை புதுப்பித்து அதன் விற்பனையை அதிகரிக்கச் செய்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார். மார்ச் மாதம் முடிவடைந்த 2023-ம் நிதியாண்டில் மட்டும் 8,00,000க்கு மேல் Royal Enfield பைக்குகள் விற்பனையாகி உள்ளன. Eicher Motors மட்டுமின்றி இக்குழுமத்தின் மற்ற நிறுவனங்களான VE வர்த்தக வாகன நிறுவனத்திலும் உயர் பதவியை வகித்து வருகிறார் சித்தார்த்தா லால்.

விளம்பரம்

இதையும் படிக்க:
7வது ஊதியக்குழு : 4% அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி

விக்ரம் லாலின் சொத்து மதிப்பு ரூ.68,442 கோடி என ஃபோர்பஸ் பத்திரிகை கூறுகிறது. தற்போது Eicher Motors நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,00,000 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் பணக்கார நபர்களில் ஒருவராகவும் விக்ரம் லால் இருந்து வருகிறார்.

.

Read More

Previous Post

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

பத்து பூத்தே முடிவு ரகசியமானது அல்ல என்கிறார் துன் மகாதீர் | Makkal Osai

Next Post
பத்து பூத்தே முடிவு ரகசியமானது அல்ல என்கிறார் துன் மகாதீர் | Makkal Osai

பத்து பூத்தே முடிவு ரகசியமானது அல்ல என்கிறார் துன் மகாதீர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin