• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.1 லட்சம் கோடி ப்ராஜெக்டில் ரிலையன்ஸுடன் இணைந்த ஆந்திர அரசு! உலகளாவிய தோட்டக்கலை மையம் அமைக்க திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரூ.1 லட்சம் கோடி ப்ராஜெக்டில் ரிலையன்ஸுடன் இணைந்த ஆந்திர அரசு! உலகளாவிய தோட்டக்கலை மையம் அமைக்க திட்டம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 02, 2026 4:28 PM IST

ராயலசீமா மற்றும் ஆந்திரப் பிரதேசம் முழுவதும் விவசாயம் மேலும் வளர்ச்சியடைய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது முழு ஆதரவையும் வழங்கும்

ஆந்திர முதல்வருடன் ஆனந்த் அம்பானி
ஆந்திர முதல்வருடன் ஆனந்த் அம்பானி

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ராயலசீமா மண்டலத்தின் விவசாயம் மற்றும் பொருளாதார நிலப்பரப்பை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்கில், அன்னமய்யா மாவட்டம் மதனாபல்லியை மையமாகக் கொண்டு ரூ.1 லட்சம் கோடி பிரம்மாண்ட செலவில் ‘உலகளாவிய தோட்டக்கலை மையம்’ அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆந்திரப் பிரதேச முதல்வர் நரா சந்திரபாபு நாயுடு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இணைந்து இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். இதில் துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் சிறப்பு அழைப்பாளராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்பிராந்தியத்தில் உலகத்தரம் வாய்ந்த விவசாயக் கல்வி, நவீன சாகுபடி முறைகள் மற்றும் ஆராய்ச்சிகளை வழங்கும் நோக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதரவோடு ‘இந்தியன் ஸ்கூல் ஆப் அக்ரிகல்ச்சர்’ என்ற முதன்மை நிறுவனமும் இங்கு நிறுவப்படவுள்ளது.

ராயலசீமா பகுதியில் பழத்தோட்டங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கான பரந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்படுகிறது. இதற்காக அதிநவீன குளிர்பதனக் கிடங்குச் சங்கிலிகள், உணவுப் பதப்படுத்தும் மையங்கள் மற்றும் சர்வதேச தரத்திலான ஏற்றுமதி வசதிகள் உருவாக்கப்படவுள்ளன. இதன் மூலம் உள்ளூர் விவசாயிகளுக்குச் சர்வதேச சந்தை இணைப்பு கிடைத்து, விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும், ராயலசீமா இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அனந்த் அம்பானி, “என்னை ஆந்திராவின் மகனாகக் கருதுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். இன்றைய இளைஞர்கள் விவசாயத்தில் போதிய லாபம் இல்லாததால் அதைவிட்டு விலகிச் செல்வதாகச் சுட்டிக்காட்டிய அவர், ராயலசீமா மற்றும் ஆந்திரப் பிரதேசம் முழுவதும் விவசாயம் மேலும் வளர்ச்சியடைய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது முழு ஆதரவையும் வழங்கும் என்று உறுதி அளித்தார்.

Read More

Previous Post

ஊழல் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தேன்: ஊழல் செய்யவில்லை – இப்படி கூறுகிறார் பந்துல

Next Post

அடுத்தடுத்து வெளியான RBI அறிவிப்பு.. ஹெச்டிஎப்சி வங்கியின் புதிய சிஇஓ யார் தெரியுமா..? | Double CEO Shake-Up: HDFC Bank Appoints Anup Bagchi After Kotak Mahindra’s Big Announcement

Next Post
அடுத்தடுத்து வெளியான RBI அறிவிப்பு.. ஹெச்டிஎப்சி வங்கியின் புதிய சிஇஓ யார் தெரியுமா..? | Double CEO Shake-Up: HDFC Bank Appoints Anup Bagchi After Kotak Mahindra’s Big Announcement

அடுத்தடுத்து வெளியான RBI அறிவிப்பு.. ஹெச்டிஎப்சி வங்கியின் புதிய சிஇஓ யார் தெரியுமா..? | Double CEO Shake-Up: HDFC Bank Appoints Anup Bagchi After Kotak Mahindra's Big Announcement

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin