Last Updated:
தற்போது வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் போன்ற வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் அவர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் , இன்று ஒரு புதிய சொகுசு காரை வாங்கியதுடன், அது குறித்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சஹால் வாங்கியுள்ள புதிய கார் BMW Z4 M40i மாடல் ஆகும். இதன் இந்தியச் சந்தை விலை (On-road price) சுமார் 1.06 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு டூ-டோர் (Two-door) கன்வெர்டிபிள் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.
கார் வாங்கியது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சஹால் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “எனது அனைத்து கனவுகளையும் நனவாக்கிய அந்த இரண்டு மனிதர்களுடன் (பெற்றோர்) சேர்ந்து இந்தப் புதிய காரை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறேன். எனது பெற்றோர்கள் இந்த மைல்கல்லைப் பார்த்து மகிழ்வதைக் காண்பதுதான் உண்மையான சொகுசு.” என்று கூறியுள்ளார்.
சஹால் 2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த போதிலும், கடந்த ஒரு வருடமாக இந்திய அணியின் ஆடும் லெவனில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
தற்போது வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் போன்ற வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் அவர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.


