அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இன்றைய (மே 19) வணிக நேர முடிவில் 17 காசுகள் உயர்ந்து ரூ. 85.40 காசுகளாக நிறைவு பெற்றது.
கடைசி வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (மே 16) ஒரு காசு உயர்ந்து ரூ. 85.53 காசுகளாக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில் இன்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்துள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு வணிக நேரத் தொடக்கத்தில் 16 காசுகள் உயர்ந்து 85.41 காசுகளாக இருந்தது.

