Last Updated:
DK Shivakumar | கர்நாடக மாநிலத்தின் 24 ஆவது முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். இவருடன் 13 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
கர்நாடகாவில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், நிதித்துறையை தன் வசம் வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் 24 ஆவது முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். இவருடன் 13 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், அமைச்சரவையில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு நேற்றிரவு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
அதன்படி, முதலமைச்சர் சிவக்குமார் நிதித்துறையைத் தன் வசம் வைத்துக்கொண்டு, துணை முதலமைச்சராக இருந்தபோது தாம் வகித்த, பெங்களூரு மேம்பாட்டுத் துறையை விட்டுக்கொடுத்துள்ளார். அத்துறை கிருஷ்ண பைரே கௌடாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த துறை மாநில நிதிநிலை அறிக்கையில் மிக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறையாகும்.
துணை முதலமைச்சர் பரமேஸ்வராவுக்கு வருவாய் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங் கார்கேவிற்கு உளவுத் துறை தவிர்த்த உள்துறையும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு நகராட்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே.எச். முனியப்பா, எம்.பி. பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோலி மற்றும் சரண் பிரகாஷ் பாட்டீல் ஆகியோர் முறையே உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல், பெரிய மற்றும் சிறு தொழில்துறை, பொதுப்பணி மற்றும் மருத்துவக் கல்வி ஆகிய துறைகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
ரூட்டை மாற்றிய கர்நாடக CM டி.கே.சிவக்குமார்… சீனியர்களுக்கு ‘நோ சேஞ்ச்’… ஜூனியர்களுக்கு ‘அசுர வேகம்!’


