• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ருத்ர தாண்டவமாடிய இஷான் கிஷன் – சூர்யகுமார்: 2வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
January 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ருத்ர தாண்டவமாடிய இஷான் கிஷன் – சூர்யகுமார்: 2வது டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி ரசிகர்களுக்கு பரபரப்பான அதிரடி ஆட்டமாக அமைந்தது. நாக்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 47 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 44 ரன்களும் எடுத்து முக்கிய பங்காற்றினர்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி தொடக்கத்தில் தடுமாறியது. இளம் வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணை நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் அதிரடி ஷாட்டுகளை மழைபோல் பொழிந்து, போட்டியின் போக்கையே மாற்றினர். குறிப்பாக இஷான் கிஷன் ருத்ர தாண்டவம் ஆடி, வெறும் சில பந்துகளிலேயே அரைசதம் கடந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 122 ரன்கள் சேர்த்த நிலையில், இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் பல பவுண்டரிகளும் சிக்ஸர்களும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் அரைசதம் கடந்து, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இறுதியில், இந்திய அணி 15.2 ஓவர்களிலேயே 209 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பதிவு செய்தது. சூர்யகுமார் யாதவ் 82 ரன்களுடனும், ஷிவம் துபே 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரில் 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க கப்பல்கள்

Next Post

தனிமையில் இருப்பவர்கள் உயிரோடு இருப்பதை உறுதி செய்ய செயலி… சீனாவின் அடுத்த அதிரடி! | Technology News (தொழில்நுட்ப செய்திகள்)

Next Post
தனிமையில் இருப்பவர்கள் உயிரோடு இருப்பதை உறுதி செய்ய செயலி… சீனாவின் அடுத்த அதிரடி! | Technology News (தொழில்நுட்ப செய்திகள்)

தனிமையில் இருப்பவர்கள் உயிரோடு இருப்பதை உறுதி செய்ய செயலி... சீனாவின் அடுத்த அதிரடி! | Technology News (தொழில்நுட்ப செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin