Last Updated:
தற்போது அனைத்து பெரிய நிறுவனங்களும் இன்ஸ்டாகிராம் மூலமும் தங்களுடைய பொருட்களையும், சேவைகளையும் மார்க்கெட்டிங் செய்து வருகின்றனர்.
தற்போது உள்ள காலகட்டத்தில் 80% இளைய தலைமுறைகள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டாகிராம் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், சிறிய தொழில் செய்ய மிகப்பெரிய வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
தற்போது அனைத்து பெரிய நிறுவனங்களும் இன்ஸ்டாகிராம் மூலமும் தங்களுடைய பொருட்களையும், சேவைகளையும் மார்க்கெட்டிங் செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் அதிக அளவில் பாலோயர்ஸ் கொண்டு வர சில நிறுவனங்களிடம் பணம் கொடுத்தும் பாலோயர்ஸ் ஏற்றி வருகின்றனர்.
இப்படி செய்வதால் உங்களின் கண்டன்ட் தகுதியான நபர்களுக்குக் கொண்டு சேராது. இன்ஸ்டாகிராமில் இயல்பாக பாலோயர்ஸைச் சேர்த்தால் மட்டுமே உங்களுக்கும் அது உபயோகமானதாக இருக்கும். இன்ஸ்டாகிராமில் மிகவும் முக்கியமானது எப்போதும் உங்கள் கணக்கில் தொடர்ச்சியாக வீடியோக்கள், போட்டோக்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். நல்ல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்த வேண்டும். பார்ப்பதற்கு அழகாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.
மக்கள் உங்கள் வீடியோக்களைக் கண்டுபிடிக்க மக்கள் தொடர்புடைய முக்கிய சொற்கள் மற்றும் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துங்கள். உங்களைப் பின்தொடர்பவர்கள் கருத்துத் தெரிவித்தால் லைக் செய்து, பதில் அளியுங்கள். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும். மேலும் அவ்வப்போது உங்களுக்குப் பிடித்தமான விஷயம் குறித்தும், டிரெண்டில் இருக்கும் தகவல்கள் குறித்தும் ஓட்டு எண்ணிக்கை நடத்தலாம்.
Reel-ஐ அதிகமாகப் பயன்படுத்துங்கள். புதிய ரசிகர்களை ஈர்க்கவும், அதிகமான மக்களை அடையவும் ரீல்ஸ் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். உங்கள் ப்ரொஃபைலைச் சிறப்பாக வடிவமைக்க வேண்டும். பொருத்தமான பெயரைத் தேர்வு செய்ய வேண்டும். அது உங்கள் கணக்கை எளிதாகத் தேடிக் காணவும், நினைவில் கொள்ளவும் எளிதாக இருக்கும் வகையில் பெயரைப் பயன்படுத்துவது நல்லது.
தொழில்முறை புகைப்படத்தைப் பயன்படுத்துங்கள். தெளிவான மற்றும் அடையாளம் காணக்கூடிய ஒரு புகைப்படத்தைப் பயன்படுத்தவும். தனிப்பட்ட பிராண்டிங் ஆக இருந்தால் உங்கள் புகைப்படம் உயர் நிறத்தில் (High Resolution) இருக்க வேண்டும். நிறுவனமாக இருந்தால் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்த வேண்டும்.
இன்ஸ்டா ஸ்டோரி ஹைலைட்ஸை ஒழுங்குபடுத்துங்கள். முக்கியமான ஸ்டோரிகளைப் பிரிவுகளாகத் தொகுத்து வழங்கினால் உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தனித்துவமாக இருக்கும், பொதுமக்களிடமும் எளிதில் கொண்டு சேர்க்கும்.
June 06, 2025 5:46 PM IST

