Last Updated:
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காப்பாற்றிய ரஜத் குமார், காதலியுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
2022 இல் சாலை விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காரில் இருந்து மீட்ட 25 வயது நபர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கினார். அப்போது அவரை மீட்டு ரஜத் குமார் என்பவர் மருத்துவமனையில் சேர்க்க உதவினார்.
தற்போது, ரஜத் குமாரும், அவரின் காதலியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள புச்சா பஸ்தியில் ரஜத் குமாரும் அவரின் காதலியான 21 வயது மனு காஷ்யப்பும் மயக்க நிலையில் கிடந்தனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருவரும் பூச்சிக்கொல்லியை குடித்திருப்பதாகவும், ரஜத் உடல்நிலை தற்போது முன்னேற்றமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், ஆனால் சாதி வேறுபாடுகள் காரணமாக அவர்களின் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளாமல், இருவருக்கும் வேறு இடங்களில் திருமண நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் விஷம் குடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய கேப்டன் இவர்தான்..! வெளியான அறிவிப்பு
அந்த பெண்ணை தகனம் செய்த சிறிது நேரத்தில் பெண்ணின் தாய், ’ரஜத் தனது மகளைக் கடத்திச் சென்று விஷம் கொடுத்ததாக’ குற்றம் சாட்டி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை விரைவில் காவல்துறை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
February 13, 2025 1:38 PM IST