Last Updated:
இந்த பொதுக்குழு கூட்டத்தின் மிக முக்கிய எதிர்பார்ப்பு ஜியோவின் ஐபிஓ சந்தைப் பங்குகள் வெளியீடு குறித்த அறிவிப்பு உள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் 49-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (AGM), இன்று (ஜூன் 19, 2026) மதியம் 2:00 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறுகிறது.
44 லட்சத்திற்கும் அதிகமான பங்குதாரர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்து முகேஷ் அம்பானி உரையாற்ற உள்ளார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தின் மிக முக்கிய எதிர்பார்ப்பு ஜியோவின் ஐபிஓ சந்தைப் பங்குகள் வெளியீடு குறித்த அறிவிப்பு உள்ளது. சுமார் $4 பில்லியன் (சுமார் ரூ. 33,000 கோடிக்கும் மேல்) மதிப்புள்ள இந்த ஐபிஓ, இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு மற்றும் செபி (SEBI) அமைப்பிடம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்வது குறித்த தெளிவான அறிவிப்பை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனம் மெட்டா (Meta) நிறுவனத்துடன் இணைந்து ஜாம்நகரில் 168 மெகாவாட் தரவு மையத்தை (Data Centre) அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ (AI) தொழில்நுட்பத்திற்காக மிகப்பெரிய முதலீடுகளை ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது
மேலும் சூரிய ஆற்றல், பேட்டரி தயாரிப்பு மற்றும் கிரீன் ஹைட்ரஜன் (Green Hydrogen) திட்டங்களுக்கான ஜிகா தொழிற்சாலைகளின் (Gigafactories) தற்போதைய நிலை மற்றும் 2026-ன் இரண்டாம் பாதியில் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்குவது குறித்த முக்கிய அப்டேட்டுகள் இதில் வெளியாகலாம்.
ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தின் விரிவாக்கம், புதிய குவிக்-காமர்ஸ் திட்டங்கள் மற்றும் பாரம்பரிய ஆயில்-டு-கெமிக்கல்ஸ் (O2C) வணிகத்தின் லாப வரம்பு மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
இந்த 49 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் பின்வரும் லிங்க்குகளில் பார்க்கலாம்.
நேரலையை எங்கு பார்ப்பது? (How to Watch Live)
இந்த நிகழ்வை நீங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் நேரலையில் காணலாம்:
Jun 19, 2026 12:24 PM IST


