• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்… சிக்னல் இல்லாமல் கூட அழைப்புகளை செய்யலாம்…!

GenevaTimes by GenevaTimes
January 26, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்… சிக்னல் இல்லாமல் கூட அழைப்புகளை செய்யலாம்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



News18

மொபைல் வாடிக்கையாளர்களின் நெட்வொர்க் அனுபவத்தை மேம்படுத்த, தொலைத்தொடர்பு துறை (DoT) ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், தங்கள் ஆப்பரேட்டரின் நெட்வொர்க் இல்லை என்றாலும்கூட அழைப்புகளை மேற்கொள்ள முடியும். நாட்டின் அனைத்து டெலிகாம் டவர்களிலும் தொடங்கப்பட்டுள்ள இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) சேவையின் உதவியுடன் இது சாத்தியமாகும்.

இந்த சேவைகள் குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் பயனுள்ளதாக இருக்கும். அங்கு நெட்வொர்க் இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த சேவையின் மூலம், உங்கள் ஆபரேட்டரின் நெட்வொர்க்கில் சிக்கல் இருந்தாலும், இப்போது நீங்கள் எளிதாக அழைப்புகளை செய்ய முடியும்.

ஜனவரி 17ஆம் தேதி அன்று, டிஜிட்டல் பாரத் நிதி (DBN) மூலம் நிதியளிக்கப்பட்ட 4G மொபைல் டவர்களை காண்பிக்கும் நிகழ்ச்சியின்போது, அரசாங்கம் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த சேவை தொடங்கப்பட்ட பிறகு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், தங்கள் சிம் நெட்வொர்க் இல்லை என்றாலும், வேறு எந்த நெட்வொர்க் மூலமாகவும் எளிதாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இதுபோன்ற சூழ்நிலையில், மொபைல் வாடிக்கையாளர்கள் எந்த டெலிகாம் ஆபரேட்டரின் சேவையை எடுத்துக் கொண்டாலும், அந்த நெட்வொர்க் இல்லை என்றால், டிஜிட்டல் பாரத் நிதியின் கீழ் உள்ள மொபைல் டவர்கள் மூலம் வேறு நெட்வொர்க்குகளின் சேவையையும் பயன்படுத்த முடியும். மேலும், வெவ்வேறு ஆபரேட்டர்களின் வாடிக்கையாளர்கள் இப்போது ஒரே டவரில் இருந்து 4G இணைப்பை அனுபவிக்க முடியும்.

டிஜிட்டல் பாரத் நிதியின் இந்த முயற்சியானது சுமார் 27,000 மொபைல் டவர்களை பயன்படுத்தி 35,400க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் மொபைல் வாடிக்கையாளர்களின் நெட்வொர்க் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. இது மட்டுமின்றி, மொபைல் வாடிக்கையாளர்களை அதிவேக 4ஜி இணைப்புடன் இணைக்கவும் உதவுகிறது.

இதையும் படிக்க: EPFO விதிகளில் ஒரு பெரிய மாற்றம்: உங்கள் PF கணக்கை ஆன்லைனில் புதிய முதலாளிக்கு மாற்றுவது எப்படி…?

இந்த சேவையை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார் மற்றும் இது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் கூறினார். இந்த சேவையின் உதவியுடன், பிஎஸ்என்எல், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய மூன்று தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் பயனடைவார்கள் என்று கூறினார்.

இதையும் படிக்க: வங்கி காசோலைகளில் கருப்பு மையால் எழுதலாமா…? – ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் சொல்வதென்ன…?

இந்த சேவையின் மூலம் நம்பகமான இணைப்பை உறுதி செய்வதிலும், அழைப்புகளின்போது ஏற்படும் சிக்கல்களை குறைப்பதிலும், நாடு முழுவதும் டேட்டா ஸ்பீடை மேம்படுத்துவதிலும் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதுவரை, DBN-ன் நிதியுதவியுடன் கூடிய டவர்கள், அதை நிறுவிய தொலைத்தொடர்பு ஆபரேட்டருக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், மற்ற வாடிக்கையாளர்கள் இந்த டவர்களுடன் இணைப்பதைத் தடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

First Published :

January 26, 2025 12:32 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்… சிக்னல் இல்லாமல் கூட அழைப்புகளை செய்யலாம்…!

Read More

Previous Post

செஞ்சூரி அடித்தும் அடுத்த போட்டியில் நீக்கிய தோனி.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு

Next Post

கோல்ஃப் மைதானங்கள்,  விமானம், சொகுசு கார்கள்.. டிரம்ப் சொத்து எவ்வளவு?

Next Post
கோல்ஃப் மைதானங்கள்,  விமானம், சொகுசு கார்கள்.. டிரம்ப் சொத்து எவ்வளவு?

கோல்ஃப் மைதானங்கள்,  விமானம், சொகுசு கார்கள்.. டிரம்ப் சொத்து எவ்வளவு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin