வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தில்லி-பர்மிங்காம் விமானம் ரியாத்துக்கு திருப்பி விடப்பட்டது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
பர்மிங்காமில் இருந்து தேசிய தலைநகருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சனிக்கிழமை ரியாத்துக்கு திருப்பி விடப்பட்டு சௌவுதி நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் விமானத்தில் வழக்கமான சோதனை நடைமுறைகள் செய்யப்பட்டன.
இதுகுறித்து ஏர் இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ஜூன் 21 அன்று பர்மிங்காமில் இருந்து தில்லிக்குச் சென்ற AI114 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதன் விளைவாக ரியாத்துக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

