தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் படி, நீட் தேர்வு (NEET UG 2024) முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம் 5ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுமார் 1.3 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
வினாத்தாளில் இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, வரும் 2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 557 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேலான தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.3 லட்சம் வரையிலான மாணவர்கள் எழுதினர்.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் படி, நீட் தேர்வு (NEET UG 2024) முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.
மேலும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு அல்லது NIRF தரவரிசை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் சேர்க்கை பெறுவதற்கு முன் NIRF தரவரிசையை சரிபார்ப்பது நல்லது.
இதையும் படிங்க:
தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக… அடுத்து என்ன நடக்கும்? அரசியல் நடைமுறை என்ன?
கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவ நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள், அவுட்ரீச் மற்றும் உள்ளடக்கிய தன்மை, மற்றும் உணர்தல் ஆகிய இந்த அளவுருக்களின் அடிப்படையில் NIRF ஒவ்வொரு நிறுவனத்தையும் தரவரிசைப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
